ரூ.56 கோடிக்கு பிரமாண்ட பங்களா வாங்கி தனது காதல் மனைவிக்கு பிரபல நடிகர் பரிசளித்துள்ளார். இந்தி திரையுலகில் பிரபலமாக இருப்பர் ஷாகித் கபூர். பிரியங்கா சோப்ராவின் முன்னாள் காதலர் என்றால் பலருக்கும் இவரை தெரியும். பத்மாவத் திரைப்படத்தில் தீபிகா படுகோன் கணவராக ஷாகித் கபூர் நடித்துள்ளார். மேலும் கரீனா கபூருடன் இவர் நடித்த ஜப் வீ மெட் திரைப்படமும் பெரும் வெற்றி பெற்றது. கடந்த காலங்களில் நடிகைகள் கரீனா கபூர், வித்யா பாலன், பிரியங்கா சோப்ரா ஆகியோரை இவர் காதலித்துள்ளார். 

ஆனால் இவர்களுடனான காதல் தோல்வியில் முடிவடைந்த நிலையில் தன்னை விட 13 வயது குறைவான மிரா ராஜ்புட்டை கடந்த 2015ம் ஆண்டு ஷாகித் கபூர் திருமணம் செய்து கொண்டார். பார்த்த உடன் மிராவுக்கும் தனக்கும் காதல் ஏற்பட்டதாகவும், இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றதாகவும் பின்னர் ஷாகித் கபூர் அறிவித்தார்.

ஷாகித் – மிரா ஜோடிக்கு ஏற்கனவே ஒரு குழந்தை உள்ளது. விரைவில் மேலும் ஒரு குழந்தை பிறக்க உள்ளது. இந்த நிலையில் மும்பையில் 56 கோடி ரூபாய்க்கு பிரமாண்ட பங்களா ஒன்றை ஷாகிக் கபூர் வாங்கியுள்ளார். ஏற்கனவே ஒரு குழந்தை உள்ள நிலையில் மேலும் ஒரு குழந்தை பிறக்க உள்ளதால் பெரிய வீடு வேண்டும் என்பதற்காக புதிய பங்களாவை வாங்கியுள்ளதாக ஷாகித் கபூர் கூறியுள்ளார். மேலும் தனக்கு 2-வது குழந்தையை பரிசளிக்க உள்ள மனைவிக்கு பரிசாக பிரமாண்ட பங்களாவை வழங்க உள்ளதாகவும் ஷாகித் தெரிவித்துள்ளார்.