நிர்வாண போட்டோவை வெளியிட்ட இலியானா! அப்படித்தான் வெளியிடுவேன் என்றும் ரசிகர்களுக்கு பதிலடி!
நடிகை இலியானா டி குரூஸ் நிர்வாண புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படம் தற்போதுவைரலாக பரவி வருகிறது. 
தமிழ், தெலுங்கு சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் இலியானா டி குரூஸ். 30 வயதாகும் இவர், தனது இன்ஸ்டாகிராம்பக்கத்தில் ஆடையில்லாத அரை நிர்வாண புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
 
அந்த புகைப்படத்தின் கீழே, ‘’யார் உன்னை பற்றி என்ன நினைத்தாலும் கவலைப்படாதே, அவர்களின் விருப்பப்படி வாழ நீ பிறக்கவில்லை.உன்னைப் பற்றி உனக்குத் தெரியும். அதன்படி நீ வாழ வேண்டும்,’’ என்று பதிவிட்டுள்ளார். 

இலியானாவின் அரை நிர்வாண புகைப்படம் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அத்துடன், அவருக்கு கண்டனங்களும் இன்ஸ்டாகிராமில்வலுத்துள்ளது.  புகைப்படத்தை பார்த்து ரசிப்பவர்களைவிட வன்மையாக கண்டிப்பவர்களே இதில் அதிகமாக உள்ளதால் புதிய சர்ச்சைஎழுந்துள்ளது. 
 
‘’தயவுசெய்து எதாச்சும் உடை உடுத்தவும்,’’…. 
‘’நிர்வாண போஸ் தரும் அளவுக்கு உடம்பில் கவர்ச்சியாக ஒன்றும் இல்லியே,’’… ‘’மிக கீழ்த்தரமான செயல்’’,… 
‘’அரை நிர்வாண போட்டோ போட்டதற்கு பதிலாக முழு நிர்வாண போட்டோ போட்டால் இன்னும் நல்லா இருக்கும்,’’…. 
‘’பெண்களுக்கு ரொம்ப இடம் கொடுத்தால் இப்படி கீழ்த்தரமாக நடந்துகொள்வார்கள்,’’…. 

இதுபோன்ற கமெண்டுகளை பலரும் பதிவிட்டுள்ளனர். எனினும், இதுபற்றி இலியானா டி குரூஸ் எதுவும் பெரியதாக அலட்டிக்கொள்ளவில்லை. தனது புதிய படங்களில் நடிப்பது மட்டுமே நோக்கம் என அவர் தரப்பில் கூறப்படுகிறது. தற்சமயம், ரவி தேஜா ஜோடியாகஅமர் அக்பர் ஆண்டனி என்ற படத்தில் இலியானா டி குரூஸ் நடித்து வருகிறார். இந்த படத்தை ஸ்ரீனு வைத்லா இயக்குகிறார். 9 ஆண்டுகள்இடைவெளிக்குப் பின்னர் ரவி தேஜாவுடன் இலியானா ஜோடி சேர்ந்துள்ளார்.  
மேலும், பாலிவுட்டில் அஜய் தேவ்கன் ஜோடியாக இலியானா நடித்து சமீபத்தில் ரிலீசான ரெய்டு படத்தின் வசூல் ரூ.100 கோடியை எட்டிசாதனை படைத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.