தற்போது திரையுலகில் அதிகம் வெளியே தெரியும் ஒரு நபராக விஷால் மாறியுள்ளார்.

எல்லாம் நடிகர் சங்கமும், தயாரிப்பாளர் சங்கமும் அவர் கைக்கு வந்த பிறகுதான்.

ரொம்ப பிஸியாக ஒருபக்க நடித்தும் வருகிறார். அவரின் “இரும்புத்திரை” படத்தின் பாடல்கள் ஆகஸ்ட் 29-ஆம் தேதி அவரின் பிறந்தநாளன்று வெளியாகும் என அறிவிப்புகள் வெளியாயின.

அதுமட்டுமின்றி, படம் ஆயுத பூஜை ஸ்பெஷலாக செப்டம்பர் 28-ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

இந்த படமாவது அவருகு வெற்றியைத் தருமா? அல்லது படுதோல்வி கொடுத்து வலைதளங்களில் மீம் கிரியேட்டர்ஸ் பங்கமாக கலாய்க்க ஒரு வாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

சிவகார்த்திகேயன் நடிக்கும் “வேலைக்காரன்” படம் செப்டம்பர் 29, அதாவது விஷாலின் படம் வெளியாகும் அடுத்த நாளில் இந்த படம் வெளியாக இருக்கிறது.

இரண்டு பெரிய நடிகர்களின் படங்கள் ஒருநாள் இடைவெளியில் வெளியாக இருக்கிறது. இரண்டு படமும் நேருக்கு நேர் மோதவில்லை என்றாலும், இதுவும் ஒரு வகையான மோதல் தான்.

இரண்டு படங்களில் யார் பாக்ஸ் ஆபிஸில் வெல்லப் போகிறார்கள்?