தல அஜித் தான் நடிக்கும் படங்களில் நடித்தோம்மா... போனோம்மா என்று இல்லாமல் அந்த படத்தில் பணியாற்றும் அனைவர் பற்றியும் தெரிந்துக்கொள்வார். அதே சமயம் அந்த படத்திற்காக வேலை செய்யும் தொழில் நுட்ப கலைஞர்கள் பற்றியும் தெரிதுக்கொண்டு அவர்கள் ஏதோனும் கஷ்டத்தில் இருந்தால் அவர்களுக்கு தன்னால் முடிந்த உதவியை செய்வார் என்று நாம் கேள்விப் பட்டிருக்கிறோம். 

மேலும் பலர் தங்களுக்கு அஜித் செய்த உதவிகள் மற்றும் அவருடன் பழகிய அனுபவங்களை அவ்வபோது பகிர்ந்துக் கொண்டு வருகின்றனர். 

சீரியல் நடிகை சுஹாசினி:

இந்நிலையில் 'தெய்வமகள்' சீரியலில் வில்லி காயத்ரிக்கு தங்கையாக நடித்து பல வில்லத்தனமான செயல்களை செய்தவர் வினோதினி. இவரின் உண்மையான பெயர் சுஹாசினி. இவர் அஜித்  நடித்த 'பரமசிவம்' , ஜெயம் ரவி நடித்த 'நிமிர்ந்து நில்' உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானவர். 

அஜித் பற்றி கூறிய சுஹாசினி...

இவர் சமீபத்தில் கொடுத்த பேட்டி ஒன்றில் அஜித்துடன் நடித்த அனுபவம் குறித்து பேசியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், "அஜித்துடன் 5 நாள் பரமசிவன் என்ற படத்தில் நான் நடித்த போது... அஜித்துக்கு இப்போது இருக்கும் வரவேற்பை விட அப்போது கொஞ்சம் குறைவாகத்தான் இருந்தது. 

ஆனால் அவர் அந்த நேரத்திலேயே தன்னுடன் நடித்த நடிகர்கள் மீது அக்கறை எடுத்துக் கொள்வார். என்னுடைய 5 நாள் படப்பிடிப்பில் நடித்தார். 3வது நாளே அஜித் எனக்கு போன் செய்து என்னுடைய பெயர், எங்கிருந்து வருகிறேன் என்ற விவரங்கள் பற்றி கேட்டு தெரிந்துக்கொண்டார்.

அவருடைய இடத்தில் இருந்து பார்த்தால் நம் படத்தில் யார் நடித்தால் நமக்கு என்ன என்று இருக்காமல் என்னை பற்றி தெரிந்து கொண்டார் என்றார் என நெகிழ்ச்சியுடன் தன்னுடைய அனுபவத்தை கூறியுள்ளார் சுஹாசினி.