seriyal actress shamili marrigae controversy
வெள்ளித்திரை நடிகைகளுக்கு எப்படி ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனரோ அதே போல் சின்னத்திரையில் நடித்து வரும் நடிகைகளுக்கும் தனி ரசிகர் கூட்டம் உள்ளது.
நடிகை ஷாமிலி:
அந்த வகையில் மிகவும் ஸ்டைலிஷாக தன்னுடைய நடிப்பை வெளிப்படுத்தி வரும் நடிகை ஷாமிலிக்கும் பல ரசிகர்கள் உள்ளனர். தற்போது இவர் மிகவும் சிம்பிள்ளாக திருமணம் செய்துக்கொண்டது போல் ஒரு புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.
சின்னத்திரையில் ஷாமிலி:
பிரபல தனியார் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் வாணி ராணி, மாப்பிள்ளை, வள்ளி உள்ளிட்ட பல சின்னத்திரை தொடர்களில் கடந்த 5 வருடமாக நடித்து வருபவர் ஷாமிலி சுகுமார்.
இது நிஜமா?
இந்த திருமண புகைப்படத்தில் மிகவும் சிம்பிள்ளாக இவர் இருப்பதால், இது உண்மையான திருமணமா? அல்லது சீரியலுக்காக எடுக்கப்பட்டதா என தொடர்ந்து பல ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறனர். இதற்கு பதில் ஷாமிலியே விரைவில் கூறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

