'தெய்வமகள்' சீரியல் மூலம் பிரபலமானவர் சீரியல் நடிகை காயத்திரி. இந்த சீரியல் முடிந்ததில் பல ரசிகர்களுக்கு வருத்தம். காரணம் ஹீரோயினை பார்க்க முடியாது என வருத்தப் பட்டவர்களை விட வில்லி காயத்ரியை பார்க்க முடியாதே என்ற ஏக்கம் தான் பல ரசிகர்களுக்கு அதிகமாக இருந்தது. 

மந்திரவாதியாக காயு:

தெய்வ மகள் சீரியல் முடிந்ததும், தற்போது இவர் இயக்குனர் சுந்தர் சி இயக்கும், நந்தினி சீரியலில் நடித்து வருகிறார். 

சம்பளம்:

தற்போது இவருடைய ஒரு நாள் சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. இவர் சின்னத்திரையில் நடிக்கும் பிரபல நடிகைகளான 'ராதிகா' மற்றும் 'ரம்யா கிருஷ்ணன்' பெரும் சம்பளத்திற்கு இணையாக வில்லி கதாப்பாத்திரத்திற்காக வாங்குகிறாராம். 

இது வரை முக்கிய கதாப்பதிரத்தில் நடித்து வரும் மிகவும் பிரபலமான நடிகைகள் மட்டும் தான் ஒரு நாளைக்கு சம்பளமாக 50,000 ரூபாய் வாங்கி வருகிறார்களாம். 

ராதிகா - ரம்யா கிருஷ்ணா:

வாணி ராணி, வம்சம் உள்ளிட சீரியல் நடித்து அசத்தி வரும் வெள்ளித்திரை நடிகைகளுக்கே இந்த தொகை தான் சம்பளமாக கொடுக்கப்படுகிறது. மேலும் சின்னத்திரையில் கதாநாயகிகளாக நடித்து வரும் பல நடிகைகள் சம்பளம் 15,000 ஆயிரத்தில் இருந்து  20,000 ஆயிரம் தான் ஒரு நாளைக்கு கொடுக்கப்படுகிறதாம். 

குணசித்திர நடிகர்கள் என்று எடுத்துக்கொண்டால் 3,000 ஆயிரத்தில் துவங்கி 10,000 ஆயிரம் வரை மட்டுமே கொடுக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.