'சரவணன் மீனாட்சி' சீரியல் மூலம் கடந்த 2010 ஆம் ஆண்டு சின்னத்திரையில் அறிமுகமானவர் நடிகை  பிரியா மஞ்சுநாதன். சீரியலை தொடந்து  டான்ஸ் மற்றும் தொகுப்பாளர் என தன்னை தானா மெருகேற்றிக்  கொண்டார்.

தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'சின்ன தம்பி' சீரியலில் நடித்து வருகிறார். 

இவருடைய திருமணம் கடந்த சில தினங்களுக்கு முன் நடைபெற்றுள்ளது . இதில்   பல தொலைக்காட்சி பிரபலங்கள் கலந்துக்கொண்டு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்தனர். 

கடந்த சில ஆண்டுகளாக இவர் ஒருவரை காதலித்து வந்தார் என கிசுகிசுக்கப் பட்ட நிலையில், தற்போது காதலித்தவரையே இவர் திருமணம் செய்துக்கொண்டதாகக் கூறப்படுகிறது.