seriyal actress gowthami feeling speech for movie

சின்னத்திரையில் பல சீரியல்களில் அம்மா, மாமியார் போன்ற முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் சீரியல் நடிகை கௌதமி. 

இவருக்கு சிறந்த நடிகை என்கிற பெயரை பெற்று தந்தது, நடிகர் சஞ்சீவ்விற்கு அம்மாவாக இவர் நடித்திருந்த 'திருமதி செல்வம்' சீரியல் தான். இந்த சீரியலை தொடர்ந்து இவர் பல சீரியல்களில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தாலும் தற்போது வரை 'பாக்கியம்' தான் அனைவருடைய நினைவிற்கும் முதலில் வரும்.

இந்த சீரியலில், இவர் நடிப்பை நிஜம் என்று நினைத்து பல ரசிகர்கள் இவரை கடுமையாக விமர்சித்தும் பேசியுள்ளனர். 

இவர் ஒரு சில, திரைப்படங்களில் நடித்துள்ளார் ஆனால் சின்னத்திரையில் கிடைத்த அங்கீகாரம் வெள்ளித்திரையில் இவருக்கு கிடைக்க வில்லை. 

இருப்பினும் வெள்ளித்திரையில் நிலையான இடத்தை பிடிக்க வேண்டும் என இவர் வாய் திறந்து வாய்புகள் கேட்டாலும், சின்னத்திரையில் பிரபலமான நடிகை என்கிற முத்திரை தன் மீது பதிந்து விட்டதால், வெள்ளித்திரையில் வாய்புகள் கொடுக்க தயங்குவதாகவும்... இதனால் தனக்கு திரைப்பட வாய்ப்புகள் கிடைக்க வில்லை என்றும் வருத்ததோடு கூறியுள்ளார் கௌதமி.