பிரபல நடிகை ஸ்ரீதேவி தனது மகள் சித்தாராவின் பிறந்தநாளை கொண்டாட்ட வீடியோவை  இன்ஸ்ட்டாவில் பகிர்ந்துள்ளார்..

பிரபல சீரியல் நடிகை ஸ்ரீதேவிக்கு கடந்த ஆண்டு ஜூலை 5ஆம் தேதி பெண் குழந்தை பிறந்தது. பின்னர் குழந்தையின் புகைப்படத்தையும் தனது இன்ஸ்டாவில் பதிவேற்றம் செய்த இவர் குழந்தை சித்தாரவுக்கென தனி இன்ஸ்ட்டா பக்கத்தையும் உருவாக்கி அதில் மகளின் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். 

ஸ்ரீதேவி அசோகின் மகள் சமீபத்தில் காதணி விழா நடைபெற்றது. அந்த விழாவில் பிரபலங்கள் பாரும் கலந்து கொண்டு குழந்தையை வாழ்த்தியிருந்தனர். இந்நிலையில் சித்தாராவின் முதலாம் ஆண்டு பிறந்தநாள் கொண்டாடப்பட்டுள்ளது. இது குறித்த பதிவை பகிர்ந்துள்ளார் ஸ்ரீதேவி. 

View post on Instagram

அதோடு பால் வாசம் வீசும் நிலா என்னும் தலைப்பில் ம்யூசிக் வீடியோவையும் உருவாக்கியுள்ளார். இந்த வீடியோவில் ஸ்ரீதேவி அசோக், அவரது குழந்தை, கணவரின் முக்கிய தருணங்களும், மகிழ்ச்சியான நேரங்களும் இடம் பெற்றுள்ளது. முன்னதாக கர்ப்பகாலத்தில் இதுபோன்ற வீடியோவை உருவாக்கி இருந்தார் ஸ்ரீதேவி.

YouTube video player

ஸ்ரீதேவி சன் டிவி, விஜய் டிவி உள்ளிட்ட பிரபல சேனல்களில் ஒளிபரப்பான சீரியல்களில் நடித்து வந்தார். பெரும்பாலும் வில்லி கேரக்டர்களிலேயே வருவார் ஸ்ரீதேவி. இவர் கல்யாணப் பரிசு,ராஜா ராணி, வாணி ராணி, தங்கம் உள்ளிட்ட சீரியல்களில் இவரது நடிப்பு ரசிகர்களால் பாராட்டப்பட்டது. நடித்திருந்தார். முன்னதாக தனுஷ் நடித்த புதுக்கோட்டையிலிருந்து சரவணன் படத்தின் மூலம் அறிமுகமான இவருக்கு சின்னத்திரையே அதிக வாய்ப்புகளை அள்ளி கொடுத்தது.

YouTube video player