ஒரு பக்கம் கொரோனாவின் கோர தாண்டவத்தினால் மக்கள் அனைவரும் பெரிதும் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், சீரியல் நடிகை ஒருவர் கொலைசெய்யப்பட்டு இறந்திருக்கலாம் என போலீசார் சந்தேகம் தெரிவித்துள்ளது, தெலுங்கு திரையுலகில் மற்றொரு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

32 வயதான தொலைக்காட்சி நடிகை சாந்தி நேற்று (வியாழக்கிழமை) அன்று அவரது வீட்டில் மர்மமான முறையில் சடலமாக மீட்கப்பட்டார்.

நடிகை வீட்டின் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் கொடுத்த தகவலில் பெயரில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், நடிகையின் உடலை கை பற்றி தற்போது தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

முதற்கட்ட விசாரணையில் தற்செயலாக குடிபோதையில் கீழே விழுந்து நடிகை இறந்திருக்கலாம்  என்று கூறப்பட்டது. எனினும் பிரேத பரிசோதனை பற்றிய முழு தகவல் கிடைத்த பின்னரே... மரணத்திற்கான முழு விவரம் வெளியாகும்.

அதே நேரத்தில் சாந்தி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகம் தெரிவித்துள்ளதால், அவர் வீடு அமைந்துள்ள இடங்களை சுற்றி உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை வைத்து, கடைசியாக அவருடைய வீட்டிற்கு யாரவது வந்தார்களா? என்பது போன்ற தகவல்களை போலீசார் சேகரித்து விசாரணையை பரப்பாப்பாக்கி உள்ளனர்.

விசாகபட்டினத்தை சேர்ந்த இவர், நடிப்பிற்காக ஹைதராபாத்தில் தங்கி இருந்தார் ஏன்பது குறிப்பிடத்தக்கது.