சின்னத்திரை நடிகை ஜெயஸ்ரீ தற்கொலைக்கு முயற்சி செய்து ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் . ஜெயஸ்ரீ மற்றும் அவரது கணவர் ஈஸ்வர் இடையே கடந்த ஒரு மாத த்திற்கும் மேலாக மோதல் உக்கிரமானதையடுத்து அவர் இந்த முடிவு எடுத்துள்ளார்.   பிரபல தொலைக்காட்சி  தொடர் ஒன்றில் வில்லியாக நடித்து பிரபலமானவர் ஜெயஸ்ரீ ,  அதேபோல் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் வெளியான பல்வேறு சீரியல்களில் நடித்து பிரபலமானவர் ஈஸ்வர் இந்நிலையில் இருவருக்கும் இடையே ஏற்பட்ட காதலையடுத்து  கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் இருவரும் திருமணம் செய்து கொண்டனர் .  பின்னர் திருவான்மியூர் காமராஜர் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் குடும்பத்துடன் வசித்து வந்தனர் .  

இந்நிலையில் நடிகை ஜெயஸ்ரீ  அடையாறு மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்று கொடுத்தார் ,  அதில் தனது கணவர் ஈஸ்வர் ,  அவரது தாயாருடன் சேர்ந்து கொண்டு தன்னை கொடுமைப்படுத்துவதாக கூறினார் .  தன் கணவர் பிரபல தொலைக்காட்சி தொடரில் நடித்து வரும் நடிகை ஒருவருடன் தொடர்பு வைத்துள்ளார் எனவே அந்த நடிகையை திருமணம் செய்து கொள்வதற்காகவே என்னையும்  என் மகளையும் கொடுமைப்படுத்தி வருகிறார் ,  அத்துடன்  தன்னிடம் இருந்த 30 லட்சம் ரூபாய் பணத்தை  என கணவர்  ஈஸ்வரா அபகரித்துக் கொண்டு தன்னை ஏமாற்றி விட்டதாகவும் ,  எனவே தற்போது குழந்தையுடன் நடுத்தெருவில் தவித்து வருவதாகவும் அவர் அந்த புகாரில் தெரிவித்திருந்தார்,  இதனையடுத்து புகார் மீது வழக்குப்பதிவு செய்த அடையாறு மகளிர் போலீசார் , ஈஸ்வரிடம்  விசாரணை நடத்தினர் . அதில்  மனைவியை கொடுமைப்படுத்தியதாக அவர் ஒப்புக்கொண்டார் .  

அதனையடுத்து  அவரை கைது செய்த போலீசார் , அவரை சிறையில் அடைத்தனர் .  ஈஸ்வர் ஜெயஸ்ரீ விவகாரம் சின்னத்திரையில்  பரபரப்பை ஏற்படுத்தியது . இந்நிலையில் ஈஸ்வர் நடித்துவந்த தொடர்பில் இருந்து அவர் நீக்கப்பட்டார் . இந்நிலையில்  குடும்ப பிரச்சினை காரணமாக தனக்கு ஏற்பட்ட மன வருத்தத்தில் இருந்தார் ஜெயஸ்ரீ , இந்நிலையிலேயே தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார் .  தற்கொலைக்கு முயன்ற அவரை  மீட்டு பெற்றோர்கள் சென்னையில் உள்ள தனியார் மருத்துமனையில் அனுமதித்துள்ளனர் .  தீவிர சிகிச்சைப் பிரிவில்  அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை வழங்கி வருகின்றனர் .கள்ளக் காதல் விவகாரத்தில் கணவர் சிறைக்கு சென்றுள்ள நிலையில் ,  மனைவி தற்கொலைக்கு முயன்று இருப்பது  சின்னத்திரையில் மிண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .