பிரபல தனியார் தொலைக்காட்சி சீரியலில், கதாநாயகனாக நடித்து வரும் நடிகர், மிக பெரிய விபத்தில் இருந்து தப்பியதாக, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்து தனக்காக கடவுளிடம் பிராத்தனை செய்த அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துள்ளார்.

திரைப்படங்களை விட, இல்லத்தரசிகள் மற்றும் இளைஞகர்களை அதிகம் கவர்ந்தது சீரியல்கள் தான். அந்த வகையில் பிரபல தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகி வரும் 'நிறம் மாறாத பூக்கள்' என்கிற தொடருக்கு பல ரசிகர்கள் உள்ளனர்.    

இந்த சீரியலில் கதாநாயகனாக நடித்து வருபவர் முரளி. இவர் தொகுப்பாளராகவும் , மாடலாக இருந்துள்ளார். சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

இந்நிலையில் இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்டுள்ள ஒரு பதிவு சீரியல்  ரசிகர்களை அதிர்ச்சியாக்கியுள்ளது.

 

 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், 'என் நலம்விரும்பிகள், நண்பர்கள், குடும்பத்தினரின் அன்பாலும் ஆசீர் வாதத்தினாலும் மிகப்பெரிய ஆபத்தில் இருந்து தப்பியுள்ளேன். அனைவருக்கு நன்றி, விரைவில் குணமடைந்து திரும்பி வருவேன் என கூறி கையில் பட்ட சிறு காயத்தை மட்டுமே புகைப்படத்துடன் வெளியிட்டுள்ளார்.

இந்த பதிவை பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள் பலர் தொடர்ந்து, இவரிடம் நலம் விசாரித்து வருகின்றனர்.