சினிமாவில் நடித்தே தீர வேண்டும் என்ற ஆசையில், ஒரு குக்கிராமத்தில் இருந்து வந்து, இன்று அனைவராலும் காமெடி நடிகராக, அறியப்பட்டவர் 
நடிகர் சென்ராயன்.

மேலும் தற்போது இவர் பிக்பாஸ் நிகழ்சியில் கலந்து கொண்டு விளையாடி வருவதால், வெள்ளி திரையில் கிடைத்த, புகழை விட இதில் அதிகமாகவே கிடைத்துள்ளது. அதே போல் கொஞ்சம் போலி தன்மை இல்லாமல் விளையாடி வரும் எதார்த்தமான மனிதராகவும் இவரை பலர் பார்த்து வருகிறார்கள்.

இந்நிலைய்ல் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் நடந்த டாஸ்கில் ஒரு நாள் முழுக்க சாப்பாடு இல்லாமல் இருந்தார் நடிகர் சென்ராயன்.

இது குறித்து கமல் அவரிடம் கேள்வி எழுப்பினார்.  அதற்கு சென்ராயன் தான் சென்னைக்கு வந்த ஆரம்ப காலத்தில் பட்ட கஷ்டங்கள் பற்றி கூறி ரசிகர்களையே கண் கலங்க வைத்துள்ளார்.

இது பற்றி அவர் கூறுகையில்... "நான் சென்னைக்கு வந்தபோது சாப்பிட கூட காசு இருக்காது. ஹோட்டலில் வேலைக்கு சேரலாம் என போய் கேட்டால் 'துணிமணி இருக்கா? பை இருக்கா?' என கேட்பார்கள். என்னிடம் எதுவும் இல்லை.  சில சமயங்களில் பசியை போக்க ஒரு சிலரிடம் கையை நீட்டி பிச்சை கூட எடுத்துள்ளேன்' சிலர் முடிந்த உதவியை செய்வார்கள். அதன் பிறகு திருமணங்களில் சாப்பாடு போடும் வேலைக்கு சேர்ந்தேன். ஆனால் அங்கும் கடைசியாக தான் சாப்பிட விடுவார்கள்.

"ஒருமுறை நண்பர் ஒருவரின் பேச்சை கேட்டு போரூரில் ஒரு கல்யாணத்துக்கு போனேன்.. காலில் செருப்பு கூட இல்லை. சோறு போட்ட பிறகு எடுத்து வாயில் வைக்கும் நேரத்தில் அங்கிருந்து என்னை பிடித்து வெளியில் அனுப்பிவிட்டார்கள். அதை மறக்கவே முடியாது."

"நான் சினிமாவில் சேர்ந்தபிறகு தான் நல்ல சாப்பாடே சாப்பிட ஆரம்பித்தேன்" என சென்ட்ராயன் உருக்கமாக கூறினார். இவரின் இந்த பேச்சு பார்க்கும் ரசிகர்களை மட்டும் இன்றி தொகுப்பாளர் கமலையும் கண் கலங்க வைத்து விட்டது.