பிக்பாஸ் முதல் சீசனோடு ஒப்பிடும் போது, இரண்டாவது சீசனுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிதாக வரவேற்பு இல்லை. ஆரம்பத்தில் இந்த நிகழ்ச்சியை விரும்பி பார்த்தவர்கள் சிலர், நேரடியாகவே நிகழ்ச்சி செம போர் அடிப்பதாக கூறி பிக்பாஸ் பார்ப்பதை தவிர்த்து விட்டனர்.

கிட்ட தட்ட 50 நாட்களுக்கு மேலாக விறுவிறுப்பு இல்லாமல் சென்றுக்கொண்டிருந்த பிஜிபோஸ் நிகழ்ச்சியில், போட்டியாளர்கள் அனைவரும், உண்மையான குணத்தை வெளிக்காட்டாமல், விளையாடி வருவதாக  பலர் கூறி வந்தனர். இதனை நேரடியாக போட்டியாளர்களிடமும் கூறினார் கமல். 

பின் மெல்ல மெல்ல நிகழ்ச்சி, சூடு பிடிக்க ஆரம்பித்தது. சில நாட்கள் சண்டை, சச்சரவு, அடிதடி வரை கூட போனது. 

அதே போல் நாளுக்கு நாள், பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விளையாடி வரும் ஐஸ்வர்யா நடந்து கொண்ட விதமும், பலருக்கும் அதிருப்தியை ஏற்படுத்தியது. பலர் இவர் எப்போது சிக்குவார் எலிமினேட் செய்யலாம் என காத்துக்கொண்டிருந்தனர்.

இந்நிலையில் இந்த வாரம், எவிக்ஷன் லிஸ்ட்டில் இவர் பெயர் இடம்பெற்றிருந்தததால் இவர் தான் எலிமினேட் ஆக நிறைய வாய்ப்புகள் உள்ளதாக கூறப்பட்ட நிலையில். நேற்றைய தினம் ரசிகர்களிடம் பேசிய கமல், அனைத்து போட்டியாளர்களை விட ஐஸ்வர்யா தான் அதிக ஓட்டுக்கள் பெற்று காப்பாற்ற பட்டர் என கூறி ஷாக் கொடுத்தார்.

இதை தொடர்ந்து நிகழ்ச்சியை பார்த்த பலரும், சென்ராயன் தான் இன்றைய தினம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியுள்ளது என கூறினர். 

இந்த தகவல் கேட்பவர்கள் அனைவருக்கும் அதிர்ச்சி கொடுக்கும் விதமாக இருந்தது. காரணம், பிக்பாஸ் நிகழ்ச்சி துவங்கிய நாள் முதல், ஒரே மாதிரி, எதார்த்தமான மனிதராக இருப்பவர் என்று அனைவரிடத்திலும் நல்ல பெயரை எடுத்தவர் இவர் தான். 

எனவே பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்த்து சென்ராயனுக்கு ரசிகர்களாக மாறியவர்கள் பலர். சென்ராயன் எதையும் எதிர்த்து பேச மாட்டார் என்பதற்காக அவருக்கு எதிராக சதி நடக்கிறது என்றும், பிக்பாஸ் தொடர்ந்து ஐஸ்வர்யாவை காப்பாற்ற சென்ராயனை திட்டம் போட்டு வெளியேற்றி உள்ளதாகவும் பல கேள்விகளை முன் வைத்து வருகிறார்கள்.  இதற்கு கமல் என்ன பதில் சொல்வார் என பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.