Selvaraghavan has Covid :  பிரபல இயக்குனரும், தனுஷின் அண்ணனுமான செல்வராகவன் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளார்.. இது குறித்து அவர் வெளியிட்டுள்ள குறிப்பில்..எனக்கு இன்று (ஜன 23) கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.. 

இந்தியாவில் கொரோனா மற்றும் ஒமைக்ரான் பாதிப்புகள் அதிகரித்துவருகின்றன. 3ம் அலைக்கான அச்சுறுத்தல் உருவாகியுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால் ஜனவரி 31ம் தேதி வரை கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் வேகத்தில் மின்னல் வேகத்தில் இருந்து வருகிறது. சென்னை, செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகரித்துக் கொண்டே வருவதால் கடந்த 6ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

 சினிமா பிரபலங்கள் பலருக்கும் கொரோனா உறுதியாகிவருகிறது. தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு, இசையமைப்பாளர் தமன், பாடகர் சோனு நிகாம் மற்றும் நடிகை த்ரிஷா நடிகர் சத்யராஜ், இயக்குனர் பிரியதர்ஷன், அருண்விஜய், குஷ்பூ, சுரேஷ் கோபி, ஜெயராம், துல்கர்சல்மான் என பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. இவர்களில் பலரும் வீடுகளிலேயே தனிமைப்படுத்தி கொண்டுள்ளனர். அதோடு பிரபல பாடகி லதா மங்கேஷ்கர் ஆபத்தான நிலையில் icu -வில் சிகிச்சை பெற்று வருகிறார்..

இந்நிலையில் பிரபல இயக்குனரும், தனுஷின் அண்ணனுமான செல்வராகவன் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளார்.. இது குறித்து அவர் வெளியிட்டுள்ள குறிப்பில்..எனக்கு இன்று (ஜன 23) கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 2 அல்லது 3 நாட்களில் என்னுடன் தொடர்பில் இருந்தோர் தயவுசெய்து நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்று உங்கள் மருத்துவரிடம் கேட்டுக் கொள்ளவும். தயவுசெய்து கவனமுடன் இருங்கள். அனைவரும் முகக்கவசம் அணிந்து பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு செல்வராகவன் கூறியுள்ளார்.

தற்போது செல்வராகவன் - தனுஷ் கூட்டணியில் நானே வருவேன் படம் உருவாகி வருகிறது. இதைத்தொடர்ந்து.. ஆயிரத்தில் ஒருவன் படத்தின் இரண்டாம் பாகத்தில் இருவரும் மீண்டும் இணையஉள்ளதாக கூறப்படுகிறது.