துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், புதுப்பேட்டை போன்ற படங்களில் பணியாற்றி தனுஷ் - செல்வராகவன் கூட்டணி தற்போது நீண்ட இடைவேளைக்கு பின் நானே வருவேன் படத்தின் மூலம் மீண்டும் இணைந்துள்ளது.

தமிழ் சினிமாவில் தனித்துவமான இயக்குனராக வலம் வருபவர் செல்வராகவன். இவர் படங்களுக்கு என மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உண்டு. குறிப்பாக செல்வராகவன் - தனுஷ் கூட்டணியில் உருவாகும் படங்களுக்கு தனி மவுசு என்றே சொல்லலாம். 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

இயக்குனர் செல்வராகவன், தனுஷ், கூட்டணி என்றாலே பலருக்கும் எதிர்பார்ப்புகள் எகிறிவிடும், இவர்களுடன் யுவன் சங்கர் ராஜாவும் இருக்கிறார் என்றால் திரையில் பட்டையைக் கிளப்பும் ட்ரீட் கன்பார்ம் என்பது ரசிகர்களுக்கு நன்றாக தெரியும். 

இவர்கள் மூவரும் இணைந்து இதுவரை துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், புதுப்பேட்டை போன்ற படங்களில் பணியாற்றி உள்ளனர். தற்போது அந்த கூட்டணி மீண்டும் ஒன்றிணைந்துள்ளது. இவர்கள் கூட்டணியில் தற்போது ‘நானே வருவேன்’ திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார்.

இந்நிலையில், இப்படத்தின் மாஸ் அப்டேட்டை இயக்குனர் செல்வராகவன் வெளியிட்டுள்ளார். அதன்படி, நானே வருவேன் படத்தின் பாடல் பணிகளை முழுவதுமாக முடித்துவிட்டதாகவும், இதனை வெளியிட ஆவலோடு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா உடன் எடுத்த செல்பி புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.

நடிகர் தனுஷும், ஐஸ்வர்யாவும் அண்மையில் விவாகரத்து பெற்று பிரிய உள்ளதாக அறிவித்தனர். தனுஷின் இந்த அறிவிப்பு அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தது. சோகத்தில் மூழ்கி இருந்த தனுஷ் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் விதமாக நானே வருவேன் படத்தின் அப்டேட்டை இயக்குனர் செல்வராகவன் வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.