கொரோனா வைரஸ் மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தி உள்ள நிலையிலும், எந்நேரமும்... பிஸியாக வேலை... வேலை... என ஓடிக்கொண்டிருப்பவர்கள் தங்களுடைய குடும்பத்துடன் சில நாட்கள் செலவிடவும் வழிவகுத்துள்ளது.

குறிப்பாக ஊரடங்கள் கிடைத்துள்ள ஓய்வு... கணவன் மனைவிக்குள் நெருக்கத்தை மேலும் அதிகரிக்க செய்துள்ளது. 

அந்த வகையில், பிரபல இயக்குனர் செல்வராகவனுக்கு அவருடைய மனைவி, காதல் பொங்கி வழிய ரொமான்டிக் முத்தம் கொடுத்துள்ள வீடியோ ஒன்றை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ நெட்டிசன்களால் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

இயக்குனர் செல்வராகவன், இயக்கத்தில் கடந்த ஆண்டு சூர்யா நடிப்பில், என்.ஜி.கே திரைப்படம், வெளியானது. ரசிகர்களின் பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெறவில்லை. எனவே தன்னுடைய அடுத்த படத்தை இயக்க தயாராகி வருகிறார்.

அடுத்ததாக இயக்குனர் செல்வராகவன் மீண்டும் தன்னுடைய சகோதரர் தனுஷூடன் இணைந்து ‘புதுப்பேட்டை 2’ படத்தை இயக்கவுள்ளார் என்கிற தகவல்கள் தொடர்ந்து வெளியான வண்ணம் உள்ளது. 

ஒரு பக்கம் தன்னுடைய திரைப்படங்களின் கதையை எழுதுவதில் இவர் பிசியாக இருந்தாலும், குடும்பத்துடன் கொரோனா ஊடாடங்கு ஓய்வு நாட்களை ஜாலியாக கழித்து வருகிறார்.

இதனை வெளிப்படுத்தும் விதமாகவே... கணவருக்கு பொங்கி வழியும் காதலோடு நச் கிஸ் அடித்து... அந்த வீடியோவையும் வெளியிட்டுள்ளார் கீதாஞ்சலி.

அந்த வீடியோ இதோ: