தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இயக்குநர் செல்வராகவன். துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், புதுப்பேட்டை, 7ஜி ரெயின்போ காலனி, மயக்கம் என்ன, ஆயிரத்தில் ஒருவன்...என்று தமிழ் சினிமாவை மெல்ல மெல்ல வேறொரு தளத்துக்கு அழைத்துச் சென்ற ஆஸம் கலைஞன். 
ஆனால் அவரது இரண்டாம் உலகம், என்.கே.ஜி. இரண்டும் படுதோல்விப் படங்கள். ’செல்வா அவ்வளவுதான்’ என்று சிலர் சொல்லிக் கொண்டிருந்த நிலையில், தன்னை செதுக்கிய அண்ணனுக்காக வரிந்து கட்டிக் கொண்டு களமிறங்கியிருக்கிறார் தனுஷ். அவர் தயாரிப்பில் செல்வா இயக்கும் படம் இன்னும் சில வாரங்களில் துவக்கம். 

இந்தப் படத்தை பழைய ‘செல்வா - தனுஷ் படங்களில் ஏதோ ஒன்றின் சீக்வெல்’ என்று சொல்லப்பட்டது. குறிப்பாக புதுப்பேட்டை பார்ட் -2 என்றார்கள். இந்தக் கேள்வி அப்படியே தனுஷிடம் வைக்கப்பட்ட போது அவர் அதை மறுக்கவில்லை. ‘எனக்கு அது தெரியாது. இருக்கலாம், இல்லாமலும் போகலாம்’ என்றார். 
இந்நிலையில் தனுஷ் - செல்வா காம்போ ப்ராஜெக்ட் அடுத்த கட்டத்துக்கு போயுள்ளது. அதாவது படத்தின் டைட்டில் ‘ராயன்’.  


இந்தப் படத்தில் நீண்ட இடைவெளிக்குப் பின் தனுஷ் - செல்வா கூட்டணியானது யுவன் சங்கர் ராஜாவோடு இசைக்கு கூட்டணி சேர்ந்துள்ளது. துவக்க காலத்தில் செல்வா பிரதர்ஸின் படைப்புகள் தாறுமாறாக ஹிட்டடிக்க மிக முக்கியமாக யுவனின் இசை உதவியது. இடையில் ஜி.வி.பிரகாஷ், பக்கம் சென்று வந்த செல்வா இப்போது மீண்டும் யுவனுடன் கைகோர்க்க துவங்கியுள்ளார். 
காதல்கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி படங்களின் பாடல்களெல்லாம் காலத்தை வென்றவை. அந்த லிஸ்டில் ‘ராயன்’ படமும் இடம் பெற வேண்டும்!
நம்புவோம்.