'ராஜா ராணி' சீரியலில் நடித்து பிரபலமானவர் நடிகை செம்பா... இவர் சீரியல் நடிகை மட்டும் அல்ல மிகச்சிறந்த டான்சர்.

இவருக்கென தனி ரசிகர்கூட்டமே உள்ளது. அதே போல் இவருக்கு சமூக வலைதளத்திலும் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர்.

 

இவர் ஏற்க்கனவே 'ஜூலியும் 4 பேரும்' என்று படத்தில் நடித்தார். ஆனால் இந்தப்படம் அவருக்கு கைகொடுக்கவில்லை. பின் அவருக்கு தேடி வந்த வாய்ப்பு தான் ராஜா ராணி சீரியல். இது அவருக்கு பிரபலம் என்ற முகவரியை கொடுத்துவிட்டது.

ஆனால் இவருக்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசையும் இருக்கிறதாம். முயற்சி செய்தாலும் அவர் குள்ளமாக இருக்கிறார் என சொல்லி தவிர்த்து வருகிறார்கள்.

இதனால் செண்பா சின்னத்திரையை தான் சினிமா போல நினைக்கிறாராம். திறமையானவர்களுக்கு வாய்ப்பு தேடி வரும் ஆல்யா. கவலைப்படாதீர்கள் என அரசிகர்கள் இவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.