இயக்குனர் ரத்தினசிவா இயக்கத்தில், ஜீவா நடித்துள்ள திரைப்படம் 'சீறு'. இந்த படத்தை ஐசரி கணேஷ் வேல் இன்டர்நேஷனல் சார்பாக தயாரித்துள்ளார்.  தற்போது இந்த படத்தில் இடம்பெற்றுள்ள 'வா வாசுகி' வீடியோ பாடல் வெளியாகி ரசிகர்களால் ரசிக்கப்பட்டு வருகிறது.

இயக்குனர் ரத்தனசிவா, 'றெக்க', 'வாடீல்'  படத்திற்குப் பின் இந்த படத்தை தயாரித்துள்ளார். ஜீவாவுக்கு ஜோடியாக ரியா சுமன் நடித்துள்ளார். மேலும் நவ்தீப், காயத்ரி கிருஷ்ணா ,உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

டி.இமான் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு, பிரசன்னகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். லாரன்ஸ் கிஷோர் படத்தொகுப்பு செய்துள்ளார்.  இந்த படத்தில் இடம்பெற்றுள்ள 'வா வாசுகி 
சிவம் மகாதேவன் பாடியுள்ளார். இமான் இசையில் விவேகா லிரிகல் வரிகளை எழுதியுள்ளார். ரொமான்டிக் பாடலாக உருவாகியுள்ள இந்த பாடலில் வீடியோ இதோ...