சில காரணங்களால் பட வெளியீடு தள்ளி போனால் கொடுத்த அட்வான்ஸிற்கு ஓடிடி நிறுவனங்கள் வட்டி வசூலிப்பதாக சீனுராமசாமி குற்றம்சாட்டியுள்ளார். 

கொரோனா அச்சத்தால் திரையரங்குகள் மூடப்பட்டிருந்தன. இதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்த துவங்கிய ஓடிடி தளங்கள் பிரபலங்கள் பலரின் படங்களையும் அதிகவிலை கொடுத்து வாங்க துவங்கின. இதற்கு முன்னமே சேரன், சூர்யா,ஜோதிகா உள்ளிட்ட பிரபலங்களின் படங்கள் ஓடிடியில் வெளியாகி இருந்தன. அப்போது இதற்கு திரையரங்கு உரிமையாளர்கள் பெரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

பின்னர் கொரோனா ஊரடங்கு காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டதால் வேறு வழியே இல்லாமல் தயாரிப்பு நிறுவங்கள் ஓடிடியை நாடத்துவங்கியுள்ளனர். ஊரடங்கு தளர்வுகளால் திரையரங்குகள் திறக்கப்பட்ட போதிலும் பிரபலங்களின் படங்கள் பெரும்பாலும் வலைதளத்தில் தான் வெளியாகி வருகிறது.

இந்நிலையில் ஓடிடி தளங்கள் குறித்து பகிர் குற்றசாட்டை முன் வைத்துள்ளார் பிரபல இயக்குனர் சீனு ராமசாமி. சமீபத்தில் ஓடிடி குறித்து பேசியிருந்த சீனுராமசாமி; திரையரங்குகளில் வெளியாகும் திரைப்படங்களும் குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு ஓடிடியில் வெளியாவது தொடர்கிறது. இதற்காக பட தயாரிப்பாளர்களுக்கு ஓடிடி நிறுவனங்கள் அட்வான்ஸ் தருகின்றன. ஆனால் சில காரணங்களால் பட வெளியீடு தள்ளி போனால் கொடுத்த அட்வான்ஸிற்கு ஓடிடி நிறுவனங்கள் வட்டி வசூலிப்பதாக குற்றம்சாட்டியுள்ள சீனுராமசாமி, தயாரிப்பாளர்கள் வளர்ந்தால் தான் ஓடிடி நிறுவனங்களுக்கும் பெருமை என அவர் தெரிவித்துள்ளார்.