அரசியலில் நெக்ஸ்ட் கொஞ்சம் ரெஸ்ட் என்று சினிமாவுக்குள் முழுமூச்சாய் நுழைந்திருக்கும் செந்தமிழர் சீமான், தனக்கு கால்ஷீட் கொடுத்த ஒரே காரணத்துக்காக, நடிகர் சிம்புவை அடுத்த சூப்பர் ஸ்டார் என்று தொடர்ந்து பேசி வருவது வலைதளங்களில் விதவிதமாக வறுத்தெடுக்கப்படுகிறது.

ஒன்றிரண்டு படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கும் சீமான் இன்னும் ஓரிரு மாதங்களில் சிம்புவை ஹீரோவாக வைத்து படம் இயக்கவிருப்பது ஏறத்தாழ கன்ஃபர்ம் ஆகியிருக்கிறது. இச்செய்தியை உறுதி செய்வது போல் சமீபத்தில் கலந்துகொள்ளும் கூட்டங்களில் எல்லாம் விஜய்,கமல், ரஜினி என்று சகட்டுமேனிக்கு கலாய்த்து வரும் சீமான் பேச்சின் எண்டுக்குள் ஏதாவது ஒரு இடத்தில், ‘நல்லா கேட்டுக்க ராஜா, இந்த ரஜினி,கமல்,விஜய் எல்லாம் ஜெயலலிதாவுக்கு பயந்துக்கிட்டு இருந்துக்கிட்டு இன்னைக்குத்தான் அரசியலே பேசுறாங்க. இவங்க எல்லாம் கோழைங்க.

அதுல அந்த விஜய் இருக்காரே எடப்படிக்கெல்லாம் கூட பயந்து அப்பாயிண்ட்மெண்ட் கேட்டு நடுங்கிட்டு இருக்காரு. எடப்பாடியே மோடிக்கு அடிமை. அந்த அடிமையைப் பார்த்து இவர் பயப்படுறாரு. ஆனா படத்துல மட்டும் வீர வசனம் பேசுறாரு. அதுவும் யாரோட வசனத்தை? இந்த அண்ணன் சீமான் மேடையில பேசுன வசனத்தைக் காப்பியடிச்சி படத்துல பேசுறாரு. ஆனா என் இயக்கத்துல நடிக்கமாட்டாரு.

உங்களுக்கெல்லாம் ஆப்பு வைக்குற என் தம்பி சிம்புவை தமிழ்ச் சிங்கத்தை இறக்கி அவன தமிழ் சினிமாவோட சூப்பர் ஸ்டாராக்கி உங்களை ஓட ஓட விரட்டுறேன்’ என்று சரியாய் சிம்புவைக் கொண்டுவந்து பேச்சை முடிக்க ஆரம்பித்திருக்கிறார். இவரது பேச்சால் விஜய் ரசிகர்கள் கொந்தளித்துப்போய் உள்ளனர்.

தம்பி சிம்புவுக்கு திடீர்னு பெரியார் மேல பக்தி வந்ததுக்குப் பின்னாடி இப்பிடி ஒரு கதை இருக்கா சுவாமிகளே...