அரசியலில் இரு துருவங்களில் இயங்கி வந்த  சீமானும்  குஷ்புவும்  'டிராபிக் ராமசாமி ' படத்தில் இணைந்து நடித்துள்ளனர். 

தமிழ்ச் சமூகத்தால் அங்கீகரிக்கப்படாத டிராபிக் ராமசாமி என்கிற  சமூகப் போராளியின் வாழ்க்கை 'டிராபிக் ராமசாமி' என்கிற திரைப்படமாகி வருகிறது.  கதை நாயகன் டிராபிக் ராமசாமியாக இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரன் டைட்டில் ரோல் ஏற்றுள்ளார்.  அவர் மனைவியாக ரோகிணி நடிக்கிறார்.

இப்படத்தின் இயக்குநராக விக்கி அறிமுகமாகிறார். இவர் பூனாவில் திரைப்படக்கல்லூரியில் திரைத்   தொழில்நுட்பம்     படித்தவர்.   ஐந்தாண்டுகள்    எஸ்.ஏ.சந்திரசேகரனிடம் உதவி இயக்குநராகவும்  இருந்தவர் . 

இப்படத்தில் தாங்களும் இருக்க வேண்டும்  என்று விரும்பிப் பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். பிரகாஷ்ராஜ் , எஸ்.வி.சேகர் ,ஆர்.கே. சுரேஷ் , அம்பிகா , உபாசனா ,கஸ்தூரி ,  மனோபாலா, மதன் பாப் ,லிவிங்ஸ்டன் , இமான் அண்ணாச்சி , மோகன்ராம் , சேத்தன் , தரணி, அம்மு ராமச்சந்திரன் , பசி சத்யா என்று பலரும் நடித்துள்ளனர் .  .  அரசியலில் இரு துருவங்களில் இயங்கி வந்த  சீமானும்  குஷ்புவும்  'டிராபிக் ராமசாமி ' படத்தில் இணைந்து நடித்துள்ளனர் .

சினிமாத்துறையிலிருந்து அரசியல் களத்துக்குப் போய் தீவிரமாகச் செயல்படுபவர் சீமான். இதே போல சினிமா தயாரிப்பு ,அரசியல் என்று இருப்பவர் குஷ்பு. இவர்கள் இருவரும் அரசியலில்  கொள்கை ரீதியாக வெவ்வேறு இரு முனைகளில் நின்றவர்கள். இவர்கள் இப்போது இப்படத்துக்காக இணைந்து நடித்துள்ளனர். அந்த அளவுக்கு அந்தப் படத்தின் கதையும் நோக்கமும் அவர்களைக் கவர்ந்து நடிக்க வைத்துள்ளது .இவர்கள் எதிர்பாராத வகையில் முக்கியமான கதாபாத்திரங்களில் வருகிறார்கள்.  

இந்தப் படத்தில் விஜய் ஆண்டனி கெளரவ வேடத்தில் வருகிறார். அநீதிகளைத் தட்டிக் கேட்கும் சமூக அக்கறை உள்ள இளைஞனாக ஒரு திரைப்பட நடிகராகவே அவர் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.