பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியதற்காக மணிரத்னம், ரேவதி உள்ளிட்ட 49 பேர் மீது தேசத் துரோக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தலையிட வேண்டும் என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.

சமூக நல்லிணக்கத்தைப் பாதிக்கும் வகையில் கும்பல் தாக்குதல் உள்ளிட்ட வன்முறைச் செயல்கள் மோடி ஆட்சிக் காலத்தில் அதிகரித்துள்ளதாக மணிரத்னம், ராமச்சந்திர குஹா, நடிகை ரேவதி உள்ளிட்ட 49 பிரபலங்கள் கடந்த ஜூலை மாதம் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்தனர்.

அதனைத் தொடர்ந்து கடந்த சில நாள்களுக்கு முன்னர், 49 பேர் மீதும் 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டதற்கு அரசியல் தலைவர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

Scroll to load tweet…

இது குறித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் டுவிட்டரில் கூறுகையில், இணக்கமான இந்தியாவை உருவாக்க முயல்வதாக பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் பதிவு செய்கிறார். பிரதமரின் விருப்பத்திற்கு மாறாக எனது நண்பர்கள் 49 பேர் மீது தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 49 பேர் மீது தொடரப்பட்ட தேச துரோக வழக்கை ரத்து செய்ய வேண்டும். ஜனநாயகத்தில் நீதியை நிலைநாட்டவும், இந்த வழக்கை உச்சநீதிமன்றம் ரத்து செய்ய வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.