’வெத வெதச்சு வேளாம செஞ்சது திண்ணையப்பன்! ஆனா நோகாம வெள்ளமைய அள்ளிட்டு போறது வெள்ளையப்பனா?’ என்று வைகைப் புயல் ஒரு படத்தில் பட்டாசாக பழமொழி ஒன்றை பேசுவார். அதற்குப் பொருத்தமான சம்பவம்தான் இது. 

ஹீரோவை வெள்ளந்தியான நபரா காட்டி எடுக்கப்படுற படங்கள்ள, ஹீரோவோட நணபன் என்னதான் பர்ஷனாலிட்டியா இருந்தாலும், பணக்காரனா இருந்தாலும், பாடி பில்டரா இருந்தாலும் கூட ஹீரோயினி என்னமோ லுக்கு விட்டு கிக்கு ஆகுறது ஹீரோகிட்டதான். அது என்னமோ தெரியல, என்ன மாயமோ தெரியல ஹீரோவோட நண்பன் கிட்ட அதுக்கு மயக்கமே வர்றதில்லை. ஆனா இதே கூத்து நிஜத்துலேயும் நடக்கோணுமுன்னு எந்த அவசியமுமில்லைதானே!

தமிழ் சினிமாவுல ஹீரோவுக்கான லட்சணங்களை மாற்றி யோசிச்ச மனுஷன் அவரு. தன்னை எப்பவும் ஏமாளியாகவும், வெள்ளந்தியாவும், வெவரமே தெரியாத ஆளாகவும் காட்டிக்கிட்டு அது மூலமாகவே ஹீரோயின்களை கவர் பண்றது மாதிரியும், வில்லன்களை வெளுத்தெடுக்க மாதிரியும் நடிக்குற மனுஷன். அண்ணன் கைவெச்ச படங்களெல்லாம் பேய் ஹிட்! பிசாசு ஹிட். 

சினிமாவில் இப்படி ஒண்ணும் புரியாத வெண்ணையாட்டமா அவர் நடிச்சாலும் கூட, நிஜத்தில் செம்ம தெளிவான மனுஷன். ஒவ்வொரு படத்துக்கும் பிடிப்பாரு பாருங்க ஃபிகர்களை! படம் முடியுறதுக்குள்ளே அப்டியொரு நெருக்கமாகிடுவாரு ஹீரோயின்களிடம். இத்தனைக்கும் இந்த நெருக்கத்தை உருவாக்க, அண்ணன் விடுற விஷயங்களெல்லாமே முருங்கக்காய் மேட்டராதான் இருக்கும். 

ஆனா இப்பேர்ப்பட்ட கில்லாடிக்கே அல்வா கிண்டி கொடுத்தார் ஒருத்தர். இத்தனைக்கும் சினிமாவுக்கும் அந்த மனுஷனுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. அந்த கூத்தை கேளுங்க பாஸ்...

நம்ம ஹீரோவுக்கு மார்க்கெட் சூடாகி, செம்ம பிக் -அப்புல போய்க் கொண்டிருந்த நேரம். புதுசா ஒரு படம் கமிட் ஆனார். அதுக்கு லோச்சனமான ஒரு ஹீரோயினை பிக்ஸ் செய்தார். பொண்ணு உயரம்தான் கொஞ்சம் வளரலையே தவிர மற்றபடி....ஒண்ணும் சொல்றதுக்கில்லை போங்க. 

ஹீரோயின் உள்ளிட்ட இத்யாதி கேரக்டர்களுடன் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு கிளம்பிவிட்டார். லொக்கேஷனோ செம்ம கிராமத்து ஏரியா. ஹீரோ, ஹீரோயினெல்லாம் நல்லபடியா ஒரு ஹோட்டலில் தங்குவதென்றால் அந்த கிராமத்திலிருந்து கிட்டத்தட்ட ரெண்டு மணி நேரத்துக்கு மேல் டிராவல் செய்யோணும். ’ஸோ! இந்த கிராமத்துலேயே எனக்கு தெரிஞ்ச நபர்களோட சில வீடுகளை, தோட்டத்து ரூம்களை வாடகைக்கு எடுத்துட்டேன். இங்கேயே தங்கி, ஸ்பீடா வேலையை முடிச்சுப்போட்டு சட்டுப்புட்டுன்னு ஊரை காலி பண்ணிடலாம்.’ என்று கண்டிஷன் போட்டார் ஹீரோ. டபுள் ஓ.கே. சொல்லிவிட்டது டீம். 

ஹீரோ தனக்கும், ஹீரோயினிக்கும் தன் நெருக்கமான நண்பர் வீட்டிலேயே மேல் மாடியில் இரண்டு அறைகளை வாடகைக்கு எடுத்திருந்தார். ஹீரோவின் நண்பரான அந்த பண்ணையார் ஆள் பார்ப்பதற்கு உரிச்சு வெச்ச பப்பாளி பழம் போல் ச்சும்மா தளதளன்னு இருப்பார். சொத்து பத்துக்கு ம்ஹூம் பஞ்சமேயில்லை! ஆனால் கல்யாணமாகி பதினஞ்சு வருஷமாகியும் குழந்தையில்ல. அதனால் ஊருக்குள் ”நம்ம பண்ணை ‘அந்த விஷயத்துக்கு’ சரிப்பட்டு வரமாட்டார். களமிறங்கியதுமே க்ளீன் போல்டு ஆகிடுவார். எம்புட்டு மருத்துவம் பார்த்தும் பிரச்னை சரியாகலை.” என்று ஒரு பேச்சு வலுவாக உண்டு. 

இந்த தகவல் ஹீரோவின் காதிலும் பல முறை விழுந்திருந்தது. ஆக ‘அந்த விஷயத்தில்’ ஈடுபாடில்லாத நபரென்பதால் துணிந்து ஹீரோயினை அந்த வீட்டில் தங்க வைத்தார். அத்தோடு விட்டாரா? நண்பன் மேலிருந்த நம்பிக்கையில், ஹீரோயினை அவருக்கு அறிமுகப்படுத்தி வைத்து ஆஹா! ஓஹோ!வென புகழ்ந்து தள்ளிவிட்டார். அந்த ஹீரோயினுடன் அந்தப் படம்தான் நம்ம ஹீரோவுக்கு முதல் படம், கூடவே ஃபீல்டுக்கும் பொண்ணு ரொம்ப புதுசு என்பதால் புத்தம் புது ரோசா மாதிரிதான். அதனால் படம் முடிவதற்குள் கொண்டாடி தீர்த்துவிடுவது என்பது ஹீரோவின்  எண்ணம். ஹீரோயினின் துணைக்கு அவரது தூங்கு மூஞ்சி பாட்டிதான் இருந்தார். அதனால் நம்மாளுக்கு செம்ம ஜாலி. 

நண்பன் மீதிருக்கும் நம்பிக்கையில் ஹீரோயினை வீட்டில் விட்டுவிட்டு லொக்கேஷன் பார்க்க போவது, ஹீரோயின் இல்லாத சீன்களை ஷூட் பண்ண போவது என்று கிளம்பிவிடுவார் ஹீரோ. இப்படியாக கிட்டத்தட்ட ஒரு மாதம் கழிந்துவிட்டது. ஒரு நாள் ஹீரோயின் வீட்டிலேயே இருக்க, ஷூட்டுக்கு கிளம்பி போயிவிட்ட ஹீரோ வயிறு சரியில்லை என்றோ ஏதோ ஒரு காரணத்தினாலோ மீண்டும் வீடு திரும்பினார். 

தன் அறைக்குள் போக நினைத்தவர், ஹீரோயின் அறைக்குள்ள் ஏதோ கிச்சு கிச்சு சப்தத்தை கேட்டு அதிர்ந்துவிட்டார். அந்த ஏரியாவினுள் நுழைந்தால் தூங்கு மூஞ்சி பாட்டி  குறட்டை விட்டு தூங்கிக் கொண்டிருந்தார். இவர், பெட்ரூமின் கதவை தட்ட, நீண்ட நேரத்துக்கு பின் தாவணியை சரி பண்ணியபடியே கதவை திறந்தது பொண்ணு. உள்ளே சேரில், லுங்கியை சரி செய்தபடி  பங்களா ஓனர். 

நொந்து போனார் நம்ம ஹீரோ. அன்னைக்கு ஷூட்டிங் கேன்சல்! என்று காட்டமாய் ஒரு உத்தரவை அனுப்பிவிட்டு பஞ்சாயத்துக்கு உட்கார்ந்துவிட்டார். ஹீரோவின் நண்பரான பங்களா ஓனரோ எந்த அச்சமோ, கூச்சமோ இல்லாமல் கேள்விகளை எதிர்கொண்டார். ஹீரோயினுக்கும் பெருசாய் எந்த பயமுமில்லை. 

ஸோ ரெண்டு பேரும் இணைஞ்சுட்டீங்க இல்லையா? சரி எப்போ ஆரம்பிச்சுது உங்க நெருக்கம்? என்று ஹீரோ கேட்க ‘இந்தப் பொண்ணு இந்த பங்களாவுக்கு வந்து தங்கிய முதல் நாள்ள இருந்தே!’ என்றதும்  தலை சுத்திவிட்டது ஹீரோவுக்கு. அடுத்த கேள்வியாக ‘ஏண்டா உனக்குதான் ‘அந்த’ விஷயத்துல நாட்டமே இல்லை! அதனாலதான் உனக்கு வாரிசு இல்லை’ன்னு பேசிக்கிறாங்களே. அப்புறம் எப்படி” என்று ஹீரோ கேட்க, நண்பரோ கூலாக...

“ நான் என்ன குழந்த பெத்துக்கவா இந்த பொண்ணு கூட ஜாலியா இருக்குறேன்? முப்பது நாளை தாண்டி எங்க படம் ஓடிக்கிட்டே இருக்குது, இன்னும் நூறு நாள் ஓடினாலும் அவளுக்கு மசக்கை பிரச்னையெல்லாம் வராது. உலகம் எவ்வளவோ டெக்னிக்கை கண்டுபிடிச்சு எங்கேயோ போயிட்டிருக்குது. நீ என்னடா இன்னும் கிராமத்தானா இருக்குற?” என்று பண்ணையார் நண்பர் போட்டாரே ஒரு போடு. ஹீரோ அத்தோடு அவுட்டு. 

பாதி படம் முடிஞ்ச பின் ஹீரோயினை மாற்றினால் பட்ஜெட் தாங்காது. அதனால் படத்தை கடுப்போடு முடித்து ரிலீஸ் செய்தார், படம் பிய்ச்சுக்கிட்டு போச்சு. ஆனால் ஹீரோதான் ஸ்பாட்டில் நடந்த கூத்துக்களை எண்ணி ‘ஏன் சோக கதைய கேளு தாய்க்குலமே!’ என்று பாடிக் கொண்டே இருந்தார் பல மாதங்களுக்கு. 

ஒரு விஷயம் தெரியுமோ!? அந்த பண்ணையாரும், பழைய ஹீரோயினும் இன்னமும் நெருங்கிய நண்பர்கள்தான்.