வெறுப்பேத்துறதை கூட வெறித்தனமான வித்தியாசமா பண்ணக்கூடிய ஹீரோ அவரு! அப்படின்னா, ஹீரோயின்களுக்கு பிராக்கெட் ராக்கெட் விடுறதுக்கு எம்மாம் மாதிரி பிரெயின யூஸ் பண்ணுவாருன்னு!? குத்த வெச்சு கோக்குமாக்கா யோசிங்கோ மைடியர் மக்களே. 

அவரை ‘கறுப்பு’ன்னு சொன்னாக்க, கறுப்பு நிறமே மன்சு கஷ்டப்படும். அம்மாம் டார்க்கு மனுஷன். ஆனா பொண்ணு புள்ளைங்க கூட லிங்க் ஆவுறதுக்கு அவரு பண்ணுற திங்கிங் எல்லாமே செம்ம்ம கலரு மாமே! கூட நடிக்கிற நடிகைங்களுக்கு பொறந்தநாள் வர்துன்னு தெரிஞ்சாக்க மனுஷன் போடுவாரு பாருங்க ஸ்கெட்ச்சு! சிறுமூளையும், பெருமூளையும் ஒண்ணா கெடந்து கொழம்பிக் கொழம்பி கொசகொசன்னு ஆயிடும். இதுக்கோசரம் நாலஞ்சு ஆஃப்களை எடுத்துக்கினு, நீலாங்கரையாண்ட ரூம போட்டு  புரண்டுப் புரண்டு யோசிப்பாரு. அப்பால மிட்நைட்டு நெருங்கச்சொல்லோ பளீர்ன்னு மனசுக்குள்ளே மின்னடிக்கும் பாருங்க, அதுக்கு அப்படியே செயல்வடிவம் கொடுத்து பர்த்டே பேபியை பேய்த்தனமா குஷியாக்கிடுவாரு. 

அப்பாலிக்கா அடுத்த பர்த்டே வரைக்கும் அந்த அம்மணி அண்ணன் பாக்கெட்லதான் பல்லாங்குழி ஆடிக்கினு இருக்கும். இப்படி இவர் கையால கசக்கி, மணக்க மணக்க முகரப்பட்ட மலர்கள் எக்கச்சக்கம், ஒன்னொன்னும் எம்மாம் ரகம். 

ஆனா டிபிரெண்டா யோசிக்கிற நம்ம அண்ணனையே டிபிக்கல்ட்டா தெறிக்க விட்ட நடிகைன்னா அது அந்தப் பொண்ணுதான். தங்கம்னா தங்கம் சொக்க தங்கம். ஒரு ஹீரோயினியாண்ட பந்தா இருந்தா பண்பு இருக்காது, பண்பு இருந்தாக்க பந்தா இருக்காது. ஆனா ஆளுக்குத் தக்கன ரெண்டையும் மாத்தி மாத்தி யூஸ் பண்ணி, இண்டஸ்ட்ரியில சகல சவுகரியமா வலம் வந்த சவுந்தர்யமான பொண்ணு அது. 

ஒரு சினிமா நிகழ்ச்சியில அந்தப் பொண்ணை கண்கொட்டாம பார்த்துட்டார் நம்ம அண்ணன்.  லூஸ் ஹேர், ஃப்ரீ ஸ்லீவ் சேலை, லெமனையும் மில்க்கையும் ஒண்ணா கலந்து பிசஞ்சாக்க வருமே ஒரு மதமதன்னு ஒரு கலரு! அந்த கலர்ல அந்தப் பொண்ணோட இடுப்பு...ன்னு இன்ச் பை இன்ச் அந்தப் புள்ளைய தன்னோட கருவிழி லென்ஸுல கதறக்கதற ரெக்கார்டு பண்ணிக்கிட்டாரு மனுஷன். 

வூட்டாண்ட வந்து படுத்தாக்க இஸ்லீப்பிங் நோ கம்மிங்! எப்டி மடக்குறது? எப்டிடா மடக்குறது?ன்னு பிரெயினை குடைஞ்சதுல பளீர்ன்னு கிடைச்சுது ஒரு யோசனை. மறுநாளை அந்த பொண்ணோட பி.ஆர்.ஓ.வை பிடிச்சு கால்சீட் கேட்டாரு. ‘மேடத்துட்டன் கேட்டுட்டு சொல்றேன்’ன்னு பதில் சொன்ன பி.ஆர்.ஓ., நாலு நாள் கழிச்சு லைன்ல வந்தார் ‘மேடத்துக்கு ஓ.கே! ஆனா சில கண்டிஷன்ஸ். ஷூட்டுக்கு முன்னாடி ஃபுல் ஸ்டோரியையும் கொடுத்துடணும்’. அண்ணனுக்கு தலைகால் புரியலை, குஷியோ குஷி. 

கால்சீட் வாங்கியாச்சு, ஆனா கதைக்கு இன்னா பண்றது? குடும்பம், குட்டி அத்தனைக்கும் லாங் லீவு போட்டுட்டு  ரெண்டு மாசம் ஒக்காந்து ஒக்காந்து யோசிச்சு பண்ணினாரு பாருங்க ஒரு ஸ்க்ரீன் பிளே! ச்சும்மா தெறிச்சுது போங்க. அதை அப்டியே ஹீரோயினுக்கு பார்சல் பண்ணினார். ஸ்டோரியோட அவுட்லைன் புரியலேன்னாலும், தன்னோட கேரக்டர்ல இம்ப்ரஸாகி நடிக்க வந்துச்சு பொண்ணு. 

ஷூட் தொடங்குறதுக்கு ரெண்டு நாள் முன்னாடி அம்மணியோட பி.ஆர்.ஓ. போன் போட்டு ‘தன்னோட கேரக்டரை மேடம் உள்வாங்கிட்டாங்க. நெருக்கமான சீன்ஸ் ஒண்ணோ ரெண்டோதான். ஸோ மத்தபடி மேடமை நெருங்குறது வெச்சுக்க கூடாது!ன்னு சொல்லச் சொன்னாங்க.’ என்று அடுத்த கட்டையை போட்டார். கருப்பனுக்கு கண்ணைக் கட்டிக் கொண்டு வந்தது. ’முதலுக்கே மோசமாச்சுன்னா, இந்த பிஸ்னஸை பண்ணி இன்னாதான் பிரயோசனம்?’என்று நொந்தவர், ‘சரி எப்படியும் மூணு மாசம் ஷூட் போகும். அட்லீஸ்ட்  பக்கத்துல நின்னு பார்த்து பார்த்தாவது சலிக்கலாமே!’என்று முடிவுக்கு வந்தார். 

ஷூட் துவங்கியது, ஹீரோவின் ஏக்கப்பார்வையை முதல் நாளில் இருந்தே உணர துவங்கினார் ஹீரோயின். ஒரு பக்கம் கடுப்பிருந்தாலும், ஒவ்வொரு காட்சியையும் அவர் படமாக்கும் விதமும், தன்னை அவர் காட்டிய ஆங்கிளையும் விரும்பினார். கலகலப்பாகவும், டிஃபரெண்டாகவும் முழு ஷூட்டும் போயி முடிஞ்சு, படம் ரெடியாச்சு, பூசணிக்காய் உடைக்கிற அன்னைக்கும் தன்னை முழுங்க ஏக்கமாய் பார்த்த ஹீரோவை, ஒரு நல்ல கலைஞனாக ரசித்துவிட்டு டாட்டா காட்டிவிட்டார் ஹீரோயின். 

படம் வெளியாச்சு. வழக்கமாக அவரது படத்துக்கு போகும் ரசிகர்கள் படத்தை கொண்டாடி தீர்க்க, பொது ஆடியன்ஸும் தியேட்டருக்கு படையெடுத்தார்கள். அவன், இவன், இவள், அவள்ன்னு எல்லோரும் படத்தை சிலாகிக்க சிலாகிக்க பிய்ச்சுக்கிச்சு படம். வசூல்னா வசூல் அண்ணனோட முந்தைய கடன்கள் அடைஞ்சு, புதிய கடன் வாங்கிட தெம்பாகுற அளவுக்கு வசூல். 

குறிப்பாக அந்த அம்மணிக்கு பாராட்டு மழை பிய்ச்சுகிச்சு. ‘உங்களை அவ்வளவு அழகா, அவ்வளவு பாந்தமா, ரொம்ப நேர்த்தியா காட்டியிருக்கார் இயக்குநர் கம் ஹீரோ!. இந்தப் படம் உங்களுக்கு ஒரு மைல் ஸ்டோன்’ என்று பாராட்டி தள்ளினார்கள் அம்மணியிடம். 

படம் வெளியாகி ரெண்டாவது வாரம், அண்ணனுக்கு பெங்களூருவிலிருந்து ஒரு போன் கால். எடுத்தால் மறுமுனையில் அம்மணி! ‘தேங்ஸ்’ என்றார், இவரோ ‘ஏங்ஸ்?’ என்று வழக்கமாக தன் வார்த்தை ஜாலத்தில் வலையை விரிக்க துவங்கினார். ‘இவ்ளோ அழகா நானே என்னை எந்தப் படத்துலேயும் பார்த்ததில்லை.’ என்று அம்மணி உருக, ‘அதைவிட அழகா என் மனசுக்குள்ளே நீங்க இருக்கீங்க. அதை வேற யாருமே பார்த்திருக்க மாட்டாங்க.’ என்று வலையை ஆழமாகவும், அழுத்தமாகவும் வீச துவங்கினார். 

‘அழகன்’ படத்தில் மம்மூட்டி, பானுப்ரியா பேசிக் கொண்டிருப்பது போல் அந்த இரவு முழுவதும் செல்லுலரிலேயே கரைந்தது. மறுநாள் காலையில் அண்ணன் பெங்களூருவுக்கு டிக்கெட் எடுத்தார்!

புறநகரில் ஒரு சர்வீஸ் அப்பார்ட்மெண்டில் மீட் செய்து கொண்டனர். இதுவரையில் அம்மணிதான் நம்ம இயக்குநருக்கு கண்டிஷன் போட்டுக் கொண்டிருந்தார். ஆனால் இந்த முறை அண்ணன் தான் கண்டிஷன் போட்டார். அது, முதன் முதலாய் ஒரு சினிமா பங்ஷனில் அம்மணியை பார்த்தாரே அதே சிவப்பு நிற சேலையில், எலுமிச்சை நிற ஹிப் தெரிய.... அதே அதே அதேதான்.

இவர் சொன்ன மாதிரியே சிவப்பு தேவதையாய் வந்து வெயிட் பண்ணிக் கொண்டிருந்தது அந்த  தேவதை! உள்ளேயும் வெளியேயும் செம்ம குஷியாய் இவர் அந்த சர்வீஸ் அப்பார்மெண்டினுள் நுழைய, கதவு இறுக்கமாய் மூடிக் கொண்டது. 

அந்த இரண்டு நாட்களும் அந்த பிளாட்டில் நடந்தவைகளை வைத்து இவர் இன்னும் நாலு படத்துக்கு ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’ எல்லாம் எழுதி, நடிக்கவும் செய்யலாம்.