Asianet News TamilAsianet News Tamil

ஒல்லியோடு ஒட்டி ஓவர் ரொமான்ஸ் பண்ண மச்ச நடிகை! பீப் மன்னனே ‘ச்சை! பீப் சவுண்டுல கேட்ட அந்தரங்க மேட்டர்!

’பல்லு இருக்கிறவன் மட்டும்தான் பக்கோடா திங்க முடியும்!’ அப்படிங்கிற மொக்க பழமொழியெல்லாம், கெட்ட கோடம்பாக்கத்துக்கு செட்டே ஆவாது! ஜாதகத்தில் அத்தனை கிரகநிலைகளும் உச்சத்தில் உள்ள ஒருவன் தோற்றத்தில் எம்புட்டு சப்பையாக இருந்தாலும், செம்ம எடுப்பாக வளர்ந்து வானுயர நிற்பான் கோடம்பாக்கத்தில். அதுதான் அந்த இண்டஸ்ட்ரியின் ஹைலைட்டே!!

Secrets revealed about Beep hero and Kolamavu actress
Author
Chennai, First Published Sep 28, 2018, 7:28 PM IST

’பல்லு இருக்கிறவன் மட்டும்தான் பக்கோடா திங்க முடியும்!’ அப்படிங்கிற மொக்க பழமொழியெல்லாம், கெட்ட கோடம்பாக்கத்துக்கு செட்டே ஆவாது! ஜாதகத்தில் அத்தனை கிரகநிலைகளும் உச்சத்தில் உள்ள ஒருவன் தோற்றத்தில் எம்புட்டு சப்பையாக இருந்தாலும், செம்ம எடுப்பாக வளர்ந்து வானுயர நிற்பான் கோடம்பாக்கத்தில். அதுதான் அந்த இண்டஸ்ட்ரியின் ஹைலைட்டே!

இதற்கு உதாராணமாய் ஆயிரம் பேரைச் சொன்னாலும் கூட அந்த பெரிய வீட்டு மாப்பிள்ளை அளவுக்கு யாரும் ஈடாக மாட்டார்கள். உச்சமா அது அய்யய்யய்யோ, அம்மாம் பெரிய உச்சத்தை ஜஸ்ட் லைக் தட் ஆக தொட்டு தடம் பதித்தவர். 

படம் ஹிட்டாகும், ஃபிளாப் ஆகும். அது எல்லாருக்கும்தான் நடக்கும். ஆனால் பளீர் பால்கோவாக்கள் அவரை அட்டை மாதிரி ஒட்டிக் கொள்வதுதான் மேட்டரே. ’என் ஒரு தொடை சைஸுக்கு கூட அவன் மொத்த ஒடம்பும் வராது. ஆனா எத்தன ஹீரோயின்களை பாக்கெட்ல வெச்சிருக்கான் பாரு!’ என்று ஒரு சீனியர் பாடி பில்டர் நடிகர் வெளிப்படையாகவே வருத்தத்தை கொட்டியிருக்கிறார் பலமுறை. 

வெறும் அதிர்ஷம் மட்டும் அவரை உச்சத்தில் வெச்சு செய்யவில்லை! அதையும் தாண்டி அவரது மூளையும் அவரை எங்கேயோ கொண்டு போய் நிறுத்தியிருக்கிறது. அவரே ஒரு படத்தில் பஞ்ச் அடிச்சா மாதிரி ‘எல்லாருக்கும் இருக்குறதை விட மூளை எனக்கு பத்து கிராம் ஜாஸ்தி’ என்பது உண்மைதானோ? என்று எண்ண வைக்குமளவுக்கு பீக்கில் இருக்கிறார், பின்னி எடுக்கிறார். அதிலும் கலர் கிளிகளை கவர் செய்யும் வித்தையில் அண்ணனிடம் பிச்சை எடுக்கணும் பிச்சை. 

சமீபத்தில் ஒரு படத்தின் சக்ஸஸ் பார்ட்டி, சென்னையிலுள்ள ஸ்டார் ஹோட்டல் ஒன்றில் நடந்தது. கோலப்பொடி நடிகை கலர்ஃபுல்லாக கலந்து கொண்டார். கூடவே வரும் அவரது ஆத்மார்த்த & ஆல்-இன் ஆல் அசிஸ்டெண்ட் ஏனோ அன்னைக்கு வரவில்லை. 

தனியாக வந்த கோலப்பொடியை கபாலென கைப்பற்றினார், அக்கட தேசத்திலிருந்து இங்கு வந்து சங்கங்களை கைப்பற்றியிருக்கும் பனைமர ஹீரோ. பர்மிஷனெல்லாம் கேட்காமல் கோலப்பொடியின் தோளில் கைபோட்டபடி இவர் ராம்ப்பில் நடக்க, கிறக்கத்திலிருந்த கூட்டம் காது கிழிய கைகொட்டியது. ஆனால் கோலப்பொடியின் முகம் வாடி இருந்ததை பல மப்புக் கண்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. 

ஒரு கட்டத்தில் பனைமரத்திடமிருந்து லேசாக கழன்று கொண்ட கலர்பொடி தனியாக ஒரு சேரில் ஐக்கியமானார். மெல்லிய உற்சாகத்துடன் கிளாஸை சுவைத்துக் கொண்டிருந்த அவரது தோளை தொட்ட ஒரு கை, ‘ஹீய் டார்லிங்’ என்றது திரும்பினால் செக்க சிவக்க நிற்கிறார் மாஜி. வம்புகளை கம்பு போல் சுற்றிச் சுழற்றி அடித்து சர்ச்சையின் மைய்யப்புள்ளியாக இருப்பதில் அண்ணனுக்கு ஏக விருப்பம். 

கோலப்பொடிக்கு வம்புவோடு வளைய வர விருப்பமில்லை, ஆனால் தூரத்தில் தன்னை தேடிக் கொண்டிருக்கும் பனைமரத்திடமிருந்து எஸ்கேப் ஆக வேண்டுமென்றால் ஒரே வழி மாஜிதான். அதனால் அவரோடு இணைந்து கொண்டார். இதைப் பார்த்ததும் பனைமரம் பொசுக்கென  முகம் பொசுங்கிவிட்டது. 

சர்ச்சை நாயகனோ கோலப்பொடியின் உடலில் புள்ளி வைத்து கோலம் போட துவங்கிவிட்டார். இவருக்கோ பேய்ட்ட தப்பி பிசாசுட்ட மாட்டுன மாதிரி கடுப்பாகிப் போச்சு. விலகவும் முடியல, தடுக்கவும் முடியல. இது புரிந்தும் கூட சர்ச்சையோ, கோலப்பொடியின் மேடு பள்ளங்களை இழுத்து அணைத்து இம்சிக்க துவங்கிவிட்டது. 

வருத்தத்தில் நெளிந்து கொண்டிருந்த கலர்பொடியின் கண்கள் திடீரென பளிச்சிட்டன. காரணம், எதிரில் எண்டர் ஆகிக் கொண்டிருந்தார் ஒல்லி கில்லி. அடுத்த சில நொடிகளில் கிளி பறந்து போயி அங்கே ஒட்டிக் கொண்டது பசக்கென! ஒரு சின்ன ஸ்மைலுடன் கிளியை அணைத்துக் கவ்விக் கொண்ட ஒல்லி, எங்கேயோ யாரையோ தேடிக் கொண்டே இருந்தார். அவரது பார்வையோ, ஸ்பரிசமோ கலர்பொடியின்  மீது ஈடுபாடுடன் படவேயில்லை. 

இது புரிந்தும் கூட கலர்பொடி அவரை இரும்புப் பிடியாய் பிடித்துக் கொண்டது! அத்தோடு நிறுத்தியதா பனைமரமும், வம்பும் செய்த அத்தனை சேட்டைகளையும் இவரிடம் அதுவே வாலண்டரியாக செய்தது. 

இதைப் பார்த்து பொசுங்கிப் போயினர் இவர்களிருவரும்! அதில் சங்க ஹீரோ மனம் நொந்து ஒரு வார்த்தை சொன்னார் சர்ச்சையின் காதில்... அது பீப் மன்னனே ‘ச்சை! பீப் சவுண்டுல சொல்லுப்பா’ என்று தலையிலடித்த வார்த்தை. 
அப்படி என்னவாதான் இருக்கும் அது?

Follow Us:
Download App:
  • android
  • ios