Secret behind baahubali Film symbols revealed

இந்திய சினிமா உலகமே தனது மூக்கின் மேல் விரல் வைத்து ஆச்சரியத்துடன் பார்த்து வருகிறது பாகுபலி 2 திரைப்படத்தின் சாதனைகளை, படத்தின் முதல் அறிவிப்பு வெளியானது முதல் இன்று வரை தொடர்ந்து பல சாதனைகளை முறியடித்தும், பல புதிய சாதனைகளை படைத்தும் வருகிறது.

குறிப்பாக உலக அளவில் 1000 கோடி வசூல் செய்த முதல் திரைப்படமும் இது தான் அடுத்ததாக 1500 கோடி வசூலை தாண்டிய முதல் படமும் இது தான் என்ற பெருமையை தன் தோளில் சுமந்து உள்ள இப்படம் பெரும் பொருட்ச்செலவில் எடுக்கப்பட்டாலும் இயக்குநர் சின்ன சின்ன விஷயங்களுக்கு கூட எந்த அளவிற்கு ஆய்வு செய்துள்ளார்.

இப்படத்தின் இடம்பெற்ற கதாப்பாத்திரங்கள் எந்த அளவிற்கு வரவேற்பை பெற்றதோ அதே அளவிற்கான வரவேற்பினை அவர்கள் உடுத்திய உடை பயன்படுத்திய பொருட்கள் அணிகலன்களும் பெற்றது, அதிலும் குறிப்பாக அனைத்து கதாப்பாத்திரங்கள் வைத்துள்ள பொட்டிற்கான கரணங்கள் என்னவாக இருக்குமென பல விவாதங்கள் நடைப்பற்றது அதனை பற்றி இப்போது பார்ப்போம்.

இந்திய கலாச்சாரத்தில் பொட்டிற்கான மகத்துவமும், முக்கியத்துவமும் அதிகம் அதன் வழியில் தயாரிக்கப்பட்ட இப்படம் கூறும் செய்தி என்ன என்றால்

அமரேந்திர பாகுபலி - பிறை;

இந்த குறியீடு பல மதங்களின் புனித குறியீடாக கருதுவது இதற்கான அர்த்தம் இரக்கம், அன்பு, சமநிலை, சமத்துவம், மென்மையான குணம் போன்றவற்றை குறிக்கும், இதே குறியீட்டினை பாகுபலி இயக்குநர் ராஜமௌலி இயக்கத்தில் வெளிவந்த 'மகதீரா' திரைப்படத்தில் காலபைரவாக நடித்த ராம் சரண் தேஜா நெற்றியிலும் பார்க்கலாம்.

பல்லால தேவா - உதிக்கும் சூரியன்;

அரக்ககுணம் படைத்த மகிழ்மதியின் அரசன் பல்லால தேவா பாகுபலி திரைப்படத்தின் முரட்டுத்தனமான வில்லன் உலகம் தோன்றியதிலிருந்து மாற்றமே காணாத நட்சத்திரம் சூரியன் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் தன்னிலை மாறாமல் இருக்கும், இது பல்லால தேவனின் குணத்தை குறிக்கிறது.

சிவகாமி - முழு நிலவு;

ராஜமாதா சிவகாமி தேவியும், பல்லாளதேவனின் அம்மா சிவகாமி மிகவும் கம்பிரமான பெண்ணாக உருவாக்கப்பட்ட ராஜா மாதா சிவகாமியின் நெற்றியில் இருக்கும் முழு நிலவு பொட்டு சமத்துவம்,தைரியம்,அக்கறை, மற்றும் ஷக்தியை வெளிப்படுத்தும் குறியீடு, இது அவருடைய கதாப்பாத்திரத்திற்க்கு மிகசரியாக இருந்தது.

பிங்கல தேவன் - திரிசூலம்;

ராஜ குரு, சிவகாமிதேவியின் கணவர், பல்லாள தேவனின் அப்பா பிங்கல தேவன் திரிசூலம் இந்திய புராணங்களில் அதிகமாக காணப்படும் குறியீடு, இந்திய வேதங்கள் திரிசூலத்தின் குணங்களாக சத்விக,ராஜசிகா மற்றும் தமாஷிக என்று கூறுகின்றன, இதில் தமாஷிக என்பது தரம்,சமநிலையின்மை,குழப்பம், பதட்டம் என கூறப்படுகிறது, இது பிங்கல தேவனுக்கு சரியாக பொருந்தியுள்ளது.

தேவசேனா - பாலின சமத்துவம்;

அமரேந்திர பாகுபலியின் காதலி குந்தல தேசத்தின் இளவரசி தேவசேனாவின் கதாப்பாத்திரம் ஆண் ,பெண் வேறுபாடு இல்லாமல் சமநிலை காணும்படி அமைத்திருப்பார்கள் தேவசேனாவின் நெற்றியில் இருக்கும் குறியீடு ஆண்,பெண் சமநிலையை குறிக்கிறது.

மகேந்திர பாகுபலி - பாம்பு மற்றும் சங்கு;

சிவபெருமானுக்கு உரிய குறியீடுகள் பாம்பும், சங்கும் மேலும் கதை எழுதும் போது ஷிவடு கதாப்பாத்திரத்திற்க்கு நந்தி என்று பெயர் வைக்கலாமா என்று கூட யோசிக்கப்பட்டதாம்,இதனால் தான் பாகுபலி திரைப்படத்தின் முதல் பாகத்தில் மகேந்திர பாகுபலி ஆகிய ஷிவடு சிவலிங்கத்தை தூக்குவது போல் காட்சி அமைக்கப்பட்டிருக்கும், இரண்டாம் பாகத்தில் இறுதிக்கட்ட காட்சிகளில் சிவனை வணங்குவது போல் காட்சி அமைக்கப்பட்டிருக்கும்.

கட்டப்பா -அடிமை குறியீடு;

ராஜமாதா சிவகாமி தேவியின் அடிமை, மகிழ்மதி சாம்ராஜ்யத்திற்கு விசுவாசமான அடிமை கட்டப்பா, சிம்மாசனத்தில் இருப்பவரின் கட்டளையை நிறைவேற்றுவதே இவரது வேலை அவரது நெற்றியில் இருக்கும் குறியீடு விசுவாசம் மற்றும் உதவியற்ற நிலையை குறிக்கிறது.

குந்தால அரசன் - கருப்பு சின்னம்;

தேவசேனையின் அண்ணனும் கூந்தலை இளவரசரின் நெற்றியில் இருக்கும் கறுப்பு சின்னம் இனி இழப்பதற்கு எதுவும் இல்லை, இழந்ததை மீட்பதற்கான போராட்டத்தை குறிக்கிறது.

அவந்திகா - வேல்கம்பு முனை;

மகேந்திர பாகுபலியின் காதலியான அவந்திகா தன்னை தானே தேவசேனாவை மீட்கும் கருவியாக தயார்ப்படுத்திக்கொள்ளும் கருவியாக அமைக்கப்பட்டிருக்கும் கதாப்பாத்திரத்தை குறிக்கிறது.

பல்லால தேவனின் மகன் பத்ரா - காளை;

பல்லால தேவனின் மகனாக வரும் பத்ரா கதாபாத்திரத்திரம் அதிகரம்,ஆதிக்கம் மற்றும் ஆக்ரோஷம் போன்றவற்ற குணங்களையும் குறிக்கிறது பிடிவாத குணத்தையும் இது வெளிக்காட்டுகிறது.

காதல் குறியீடு;

அவந்திகா மற்றும் ஷிவடு என்னும் மகேந்திர பாகுபலி தோல் பட்டைகளில் உள்ள குறியீடுகள் ஒன்றிணையும் போது இரு உடல்கள் ஒன்றானதை குறிக்கும் காதல் சின்னமாகும்.