sc st prevention case files against gayathri for his cherry behavior Comments
பிக் பாஸ் நிகழ்ச்சியில் சேரி பிகேவியர் என்று தலித் மக்களை இழிவாக பேசிய நடிகை காயத்திரி மீது வன் கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு தொடரப்படும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
விஜய் தொலைக்காட்சியில் பிக் பாஸ் என்ற நிகழ்ச்சியை கமலஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சி தொடங்கியதில் இருந்தே பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக்கொண்டிருக்கிறது.
நடிகை அனுயா, கஞ்சா கருப்பு போன்ற பிரபலங்கள் இந்த நிகழ்ச்சியில் இருந்து எலிமினேட் பண்ணப்பட்ட நிலையில் , பரணி சுவர் ஏறி குதித்து நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார்.
இந்த நிகழ்ச்சியில் பங்பேற்றுள்ளவர்கள் ஒருவரை ஒருவர் போட்டுக் கொடுப்பது, அநாகரீகமாக பேசுவது என கீழ்த்தரமாக நடந்து வருகிறார்கள்.
குறிப்பாக நடிகை காயத்ரி, சேரி பிஹேவியர் என்ற வார்த்தையை பயன்படுத்தி ஒட்டு மொத்த தலித் மக்களையும் அவமானப் படுத்திவிட்டார் என்று கூறப்படுகிறது.
ஏற்கவே எச்ச என்ற வார்த்தையை பயன்படுத்தி அனைவரின் வெறுப்பையும் சம்பாதித்துக் கொண்ட காயத்ரி தற்போது சேரி பிஹேவியர் என்று வார்த்தையை பயன்படுத்தியதால் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
ஹவுஸ்மேட்டாக உள்ள நடிகை ஓவியாவை சேரி பிஹேவியர் என்ற வார்த்தை மூலம் திட்டியது தற்போது சமுக வலை தளங்களில் கடும் கண்டனத்தை ஏற்படுத்தியுள்ளது.
தலித் மக்களை இழிவுபடுத்தும் இந்த நிகழ்ச்சியை ஒளிபரப்பியதற்காக விஜய் தொலைக்காட்சி மன்னிப்புக் கேட்க வேண்டும் எனவும் இதனை தொகுத்து வழங்கும் கமலஹாசன் இந்த நிகழ்ச்சியில் வெளியேற வேண்டும் என்றும் சமூக வலைதளத்தில் தகவல்கள் பரப்பப்படுகின்றன.
இந்நிலையில் மதுரை எவிடன்ஸ் என்ற அமைப்பைச் சேர்ந்த கதிர் , நடிகை காயத்ரி மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
மேலும் காயத்ரி மீது காவல் துறையில் புகார் அளிக்கப் போவதாக தெரிவித்துள்ளார்.
