‘ஆர்யாவைக் கல்யாணம் செய்துகொள்ள அனுமதிக்க முடியாது. அனுமதிக்கவே முடியாது. அனுமதிக்க முடியவே முடியாது’ என்று திட்டவட்டமாக நடிகை சாயிஷாவிடம் அவர் குடும்பத்தினர் கூறிவிட்டதாக நம்பகமான தகவல்கள் நடமாடுகின்றன.

மும்பையை சொந்த ஊராகக் கொண்ட சாயிஷா தெலுங்குப் படமான ‘அகில்’ மூலம் அறிமுகமாகி, தமிழில் ‘வனமகன்’ தொடங்கி ‘கடைக்குட்டி சிங்கம்’, ‘ஜூங்கா’ போன்ற படங்களில் நடித்திருக்கிறார். இஸ்லாமியப்பெண்ணான இவருக்கு ஆர்யாவுடன் ‘கஜினிகாந்த்’ படத்தில் நடித்தபோது காதல் ஏற்பட்டது.

இந்த காதல் கோயிங் ஸ்டெடியாக இருந்த நிலையில் வரும் மார்ச் மாதம் 10 ம் தேதி இருவருக்கும் ஹைதராபாத்தில் திருமணம் என்று ஆர்யா தரப்பில் செய்தி பரப்பப்பட்டது. கடந்த ஒருவாரமாக இச்செய்தி தீப்பிடித்திருந்த நிலையில், சாயிஷாவின் குடும்பத்தினருக்கு ஆர்யாவின் முன்னாள் காதல்கள் குறித்த செய்திகள் பறந்தன.

அதைக் கேள்விப்பட்ட சாயிஷா குடும்பத்தினர் மிகவும் கொதித்துப்போய், சாயிஷாவை அழைத்து ‘ஆர்யாவுடன் திருமணம் என்பதை சுத்தமாக மறந்துவிடு. அவரைத் தவிர வேற யாரைச் சொன்னாலும் திருமணம் செய்துவைக்கிறோம். நீ அப்படி சொல்கிற நபர் ஹீரோவாக இருக்கவேண்டிய அவசியமில்லை. ஒரு ஜூனியர் ஆர்டிஸ்டாக இருந்தாலும் சம்மதிக்கிறோம்’ என்று கறாராகச் சொல்லிவிட்டார்களாம்.