நடிகர் ஆர்யா, இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிக்க உள்ள 'சல்பேட்டா' படத்திற்காக தற்போது தயாராகி வருகிறார்.

குத்துச்சண்டை விளையாட்டை மையப்படுத்தி உருவாகும் இந்த படத்திற்காக, கடந்த சில மாதங்களாகவே கடினமான உடல் பயிற்சிகளை மேற்கொண்டு, உடல் எடையை அதிகரித்து, கட்டு கட்டான உடல் கட்டுக்கு மாறியுள்ளார் ஆர்யா.

ஏற்கனவே இந்த படத்தில் நடிப்பது பற்றி ரசிகர்களிடம் தெரிவித்து, தன்னுடைய புதிய தோற்றத்துடன் கூடிய புகைப்படத்தை வெளியிட்டிருந்த ஆர்யா, கடந்த ஓரிரு தினங்களுக்கு முன், புஷ் அப் செய்யும் போது, அவருடைய ட்ரைனர் அவரை வயிற்றில் அடிக்கும் காட்சியை வெளியிட்டார். இதனை கண்ட ரசிகர்கள் பலர் ஆர்யாவின் கடின உழைப்பை கட்டு வியர்ந்தனர்.

இந்நிலையில் கணவர் ஆர்யா உடல்பயிற்சி செய்யும், வீடியோவை பார்த்த சாயிஷா, கணவர் ஆர்யாவை பார்க்கும் போது தனக்கு வலிப்பதாகவும், அவர் கடினமாக உழைக்கிறார் என்றும் வேதனையோடு ட்விட் செய்துள்ளார்.

அந்த ட்விட் இதோ...