Save Tamil Cinema - Director Shankar on Twitter
மத்திய அரசின் ஜிஎஸ்டி வரியால் தமிழ் திரையுலகம் பாதிக்கப்படும் என இயக்குனர் சங்கர் கருத்து தெரிவித்துள்ளார்.
நாட்டில் ஏற்கனவே நடைமுறையில் இருந்த உற்பத்தி வரி, விற்பனை வரி போன்ற பல்வேறு மறைமுக வரிகளுக்கு மாற்றாக ஜி.எஸ்.டி வரியை அம்பலப்படுத்தியுள்ளது. இதன் மூலம் நாட்டிலுள்ள அனைத்து மக்களும் இனி ஒற்றை வரி விதிப்பு முறையின் கீழ் வந்துள்ளனர்.
மத்திய அரசின் ஜிஎஸ்டி வரி விதிப்பில் திரைத்துறைக்கு 28% வரி விதிக்கப்பட்டுள்ளது. இத்துடன் மாநில அரசு சார்பில் நகராட்சி வரியும் விதிக்கப்படுகிறது. இரு அரசுகளின் வரி விதிப்பால் திரைத்துறை மிகவும் பாதிக்கப்படும் என திரையுலகினர் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், “தமிழ் சினிமாவிற்கு மட்டும் ஜி.எஸ்.டி மற்றும் தமிழகத்தில் 50% வரை வரி விதிப்பது மிகவும் அதிகம். தமிழ் திரையுலகைக் காப்பாற்றுங்கள்” என இயக்குநர் ஷங்கர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
தமிழகம் முழுவதும் இன்று முதல் காலவரையற்ற திரையரங்க வேலை நிறுத்தப் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
