Sathyaraj slapped Prabas at Shooting spot

‘பாகுபலி’ முதல் பாகம் எவ்வளவு பெரிய வெற்றி பெற்றதோ அதனைவிட பல மடங்கு பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது 'பாகுபலி 2'. இந்தப் படத்தின் வெற்றிக்கு மிக முக்கிய பலமாக அமைந்திருந்தது சத்யராஜ நடித்த ‘கட்டப்பா’ எனும் கேரக்டர். ‘பாகுபலி 2’ படத்தின் முதல் எதிர்பார்ப்பே ‘’கட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றார்…?" என்ற கேள்வியே.

அந்தளவிற்கு சத்யராஜின் கேரக்டர் நிஜமாக இருந்தது. அதேபோல் பிரபாஸின் காலை தூக்கி தனது தலையில் வைக்கும் சீனில் சத்யராஜ் பிரபாஸின் வலது காலை தூக்கியபோது பிரபாஸ், "சத்யராஜ் போன்று சீனியர் நடிகரின் தலையில் நான் கால் வைப்பதா…?" என மறுக்க, ராஜமௌலி எவ்வளவோ சொல்லியும் கேட்காததால் திடீரென பளார் என்று பிரபாஸின் கன்னத்தில் அறைந்துவிட்டாராம் சத்யராஜ். 

பிறகு "நடிப்பு என்று வந்துவிட்டால் சீனியர், ஜூனியர் என்றெல்லாம் கிடையாது" என்று எடுத்துக் கூற, அதன்பிறகே பிரபாஸ் அந்தக் காட்சியில் நடித்தாராம்.