sathiyaraj help for murder person family
சமீபத்தில் சத்யராஜின் சொந்த ஊரான கோவை பகுதியில் பரூக் என்ற கூலித்தொழிலாளி கொலை செய்யப்பட்டார்.
திராவிட கழகத்தை சேர்ந்த பரூக், இஸ்லாம் மதத்திற்கு எதிராக கருத்து கூறியதால் ஆத்திரமடைந்து பரூக்கை கொலை செய்ததாக அன்சாத், சதாம் உசேன் உள்ளிட்ட 6 பேர் நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர்.
ஏற்கனவே வறுமையால் வாடும் பரூக் குடும்பத்திற்கு இந்த சம்பவத்தால் நாடு தெருவுக்கு வரும் சூழ்நிலை ஏற்பட்டது.
இந்நிலையில் திராவிடர் கழகத்தின் அனுதாபியும், பெரியாரின் உண்மைத்தொண்டர்களில் ஒருவருமான சத்யராஜ், கொலை செய்யப்பட்ட பரூக் குடும்பத்திற்கு ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார்
சத்யராஜின் இந்த நிதியுதவி பரூக் குடும்பத்தினர்களுக்கு பேருதவியாக இருந்தது. அவர்கள் சத்யராஜூக்கு தங்கள் நன்றியை தெரிவித்தனர். இந்த தகவல் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியதால் சத்யராஜூக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
