sathiyarah daugther rummer

பிரபல நடிகர் சத்தியராஜின் மகள் திவ்யா நடிக்க வர உள்ளதாக சமூக வலைதளங்களில் ஒரு செய்தி தீயாக பரவியது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

இதுகுறித்து திவ்யா வெளியிட்டுள்ள அறிக்கையில், நான் சினிமாவில் நடிக்கவுள்ளதாக வெளியான தகவல் உண்மை இல்லை. மேலும் எனக்கு சினிமாவில் நடிக்க துளியும் விருப்பமில்லை. 

கடந்த 7 ஆண்டுகளாக சென்னையில் உள்ள இரு மருத்துவமனைகளில் ஊட்டச்சத்து மருத்துவராக பணியாற்றி வருகிறேன். ஊட்டச்சத்து குறித்து பி.எச்.டி உயர் படிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறேன்.

மேலும் சினிமா மீது எனக்கு நல்ல மரியாதை உண்டு. நிறைய திரைப்படங்கள் பார்த்து ரசிப்பேன். இருப்பினும் படங்களில் நடிக்க வேண்டும் என்கிற எண்ணம் இல்லை. இது வரை ஊட்டசத்து சம்மந்தமான ஒரே ஒரு ஆவணப்படத்தில் மட்டுமே நடித்திருக்கிறேன். இவ்வாறு திவ்யா தன்னுடைய அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்