இயக்குனர் நடிகர் என பல முகம் கொண்டவர் சசிக்குமார், இவர் பல கருத்துள்ள படங்களை கொடுத்தவர். பலர் படங்களில் மட்டும் தான் நல்ல கருத்துக்களை எடுத்து கூறுவர் ஆனால் நிஜத்தில் அப்படி இருக்க வாய்ப்பு குறைவுதான்.

ஆனால் இவர் சற்று வித்தியாசமாக நிஜத்திலும் ஒரு காரியத்தை செய்து ரியல் ஹீரோவாக மக்கள் மனதில் இடம் பிடித்துள்ளார்.

நேற்று செய்தித்தாளில் வெளியான ஒரு செய்தி தான் இவரை ஹீரோவாக்கி உள்ளது.

தமிழகத்தின் சேலம் மாவட்டத்தை சேர்ந்த பளு தூக்கும் வீராங்கனைகள் மூன்று பேர், பால் வியாபாரம் செய்து தங்களுடைய படிப்பு செலவை சமாளித்து வருவதாகவும் சொல்லப்பட்டிருந்தது.

இவர்கள் மூவரும் உடன் பிறந்த சகோதரிகள், இவர்கள் அப்பாவின் வருமானம் போதுமானதாக இருப்பதால் இப்படி செய்துவருவதாக கூறியிருந்தார்கள்.

மாநில அளவிலும், தேசிய அளவிலும் சாதித்துள்ள இவர்களின் வளர்ச்சிக்கு யாரேனும் உதவி செய்தால் நன்றாக இருக்கும் என அவர்களின் தந்தை கூறியிருந்தார்.

இதை கத்துகுட்டி பட இயக்குனர் சரவணன் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட அதற்கு சசிகுமார், இனி அந்த மூன்று பேரும், என் சகோதரிகள். அவர்களின் செலவு நான் ஏற்கிறேன், என தெரிவித்துள்ளார்.

உண்மையிலேயே இதற்காக அவருக்கு சல்யூட் போடலாமே.....