சசிகுமார் நடிப்பில் வெளியான காரி படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி எப்போது என்பது குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அறிமுக இயக்குநர் ஹேமந்த் இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் கடந்த நவம்பர் 25 ஆம் தேதி வெளியான படம் காரி. இந்தப் படத்தில் சசிகுமாருடன் இணைந்து பார்வதி அருண், ஜே.டி.சக்கரவர்த்தி, பாலாஜி சக்திவேல், சம்யுக்தா, நரேன், ஆடுகளம் நரேன், அம்மு அபிராமி ஆகியோர் பலர் நடித்திருந்தனர். இமான் இந்தப் படத்திற்கு இசையமைத்திருந்தார். சென்னை மற்றும் ராமநாதபுரம் ஆகிய பகுதிகளை சுற்றிலுமே படப்பிடிப்பு நடந்துள்ளது.

கத்தாரில் நடந்த ஃபிபா உலக கோப்பையை கண்டுகளிக்க குடும்பத்துடன் சென்ற அருண் விஜய்..! வைரலாகும் போட்டோஸ்!

முழுக்க முழுக்க ரேஸ் ஜாக்கி, ஜல்லிக்கட்டு காளையை மையப்படுத்தி இந்தப் படம் உருவாக்கப்பட்டிருந்தது. அறிமுக இயக்குநர் என்பதால், எங்க ஆரம்பிக்க வேண்டும் எங்க முடிக்க வேண்டும் என்ன தேவை எது தேவையில்லை என்பதை தெளிவாக புரிந்து கொள்ளாமல் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று படத்தை எடுத்து முடித்து வைத்திருக்கிறார். நல்ல வேளை மாஸ் ஹீரோ என்று படத்தில் யாரும் இல்லை.

மகனுக்காக கட்டிய மருத்துவமனையில்... ஏழை குழந்தைகளுக்கு இலவச சிகிச்சை - நெப்போலியனுக்கு என்ன ஒரு தாராள மனசு

இப்போதெல்லாம் ஒரு படம் நன்றாக இருந்தால், ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள், இல்லையென்றால், தாறுமாறுகாக கேலியும், விமர்சனமும் செய்து ஏண்டா இப்படியொரு படம் எடுத்தோம் என்று தோன்றும் அளவிற்கு ரசிகர்கள் செய்து விடுகிறார்கள். ஒவ்வொரு படமும் ரிலீஸ் ஆனாலும் திரையரங்குகளில் ரசிகர்கள் அதிகம் இருக்கிறார்களோ இல்லையோ யூடியூபர்ஸ் அதிகளவில் இருக்கிறார்கள்.

அப்படிப்பட்ட வரிசையில் இடம் பெற்ற படம் தன் காரி. வரும் 23 ஆம் தேதி ஜி5 ஓடிடி தளத்தில் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு படம் திரைக்கு வந்து ஒரு மாதம் ஆவதற்குள்ளாக ஓடிடியில் ரிலீஸாகிறது என்றால் அது சசிகுமாரின் காரி படம் தான்.

ஆர்ஆர்ஆர் கொடுத்த சக்சஸ்: சம்பளத்தை 100 கோடி வரை உயர்த்திய ராம் சரண்!