அண்மையில் விமான பயணத்தின்போது நடிகர் ரஜினிகாந்த்தை சந்தித்த  சசிகலா புஷ்பா எம்.பி.  தமிழக அரசியலில் தலைவர்களுக்கு பஞ்சம் ஏற்பட்டிருக்கிறது. ஒரு நல்ல தலைவரை தமிழகம் தேடுகிறது.  அந்த ஒரு நல்ல தலைவர் நீங்கள்தான் என்றும், தமிழகத்தின் அடுத்த முதலமைச்சர் நீங்கள்தான் என்றும் கூறி மகிழ்ச்சி அடைந்துள்ளார். 

இமயமலைக்கு சென்றிருந்த நடிகர் ரஜினிகாந்த் கடந்த வாரம் டெல்லியில் இருந்து விமானத்தில் சென்னை திரும்பினார். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

அப்போது அதே விமானத்தில் பயணித்த அதிமுக ராஜ்யசபா எம்.பி. சசிகலா புஷ்பா. விமானத்தில் ரஜினிகாந்த் இருப்பதைப் பார்த்ததும், உற்சாகத்தில் தள்ளிக் குதித்தார்.

பின்னர் ரஜினியிடம் பேசிய சசிகலா புஷ்பா, தமிழக அரசியலில் தலைவர்களுக்கு பஞ்சம் ஏற்பட்டிருக்கிறது. ஒரு நல்ல தலைவரை தமிழகம் தேடுகிறது. அந்த ஒரு நல்ல தலைவர் நீங்கள்தான் என்றும், தமிழகத்தின் அடுத்த முதலமைச்சர் நீங்கள்தான் என மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

இதையடுத்து சசிகலா புஷ்பாவின் வார்த்தைகளை ஏற்றுக் கொண்ட ரஜினிகாந்த், ரொம்ப சந்தோஷம் என்று சொல்லி அனுப்பி வைத்தார்.