'சார்பட்டா பரம்பரை' படத்தின் தொலைக்காட்சி உரிமையை கடும் போட்டிக்கு இடையே கைப்பற்றியது எந்த சேனல் தெரியுமா?
இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில், ஆர்யா பாக்ஸராக நடித்துள்ள 'சார்பட்டா பரம்பரை' திரைப்படம், அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வரும் 22 ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், கடும் போட்டிக்கு இடையே இந்த படத்தின் தொலைக்காட்சி உரிமையை பிரபல சேனல் கைப்பற்றியுள்ளது.
இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில், ஆர்யா பாக்ஸராக நடித்துள்ள 'சார்பட்டா பரம்பரை' திரைப்படம், அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வரும் 22 ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், கடும் போட்டிக்கு இடையே இந்த படத்தின் தொலைக்காட்சி உரிமையை பிரபல சேனல் கைப்பற்றியுள்ளது.
இயக்குனர் பா.ரஞ்சித் தன்னுடைய பாணியில் இருந்து சற்று வித்தியாசப்போட்டு 80 களில் வடசென்னையில் நடைபெறும் பாக்சிங் போட்டியை மையமாக வைத்து 'சார்பட்டா பரம்பரை' படத்தை இயக்கி உள்ளார். இந்த படத்திற்காக நடிகர் ஆர்யா கடின உடற்பயிற்சிகள் செய்து உடல் எடையை குறித்து, பாக்ஸர் போல் உடல் கட்டுகளுக்கு மாறி நடித்துள்ளார். இவர் மட்டும் அல்லது ஒட்டு மொத்த படக்குழுவினரே இந்த படத்திற்காக எவ்வளவு கடினமான உடல் பயிற்சிகளை மேற்கொண்டு நடித்துள்ளனர் என்பது, ட்ரைலரின் மூலமே தெரிந்தது.
இந்த படம் திரையரங்கில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது கொரோனா பேரிடர் காரணமாக திரையரங்கு ரிலீஸ் தள்ளி போய் கொண்டே இருப்பதால்... படத்தை ஓடிடி தளத்தில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளனர். அதன் படி நாளை மறுநாள் அதாவது ஜூலை 22 ஆம் தேதி, வெளியாக உள்ளது. இப்படம் ஆர்யா திரையுலக வாழ்க்கையில் முக்கிய படமாக இருக்கும் என்றும் கருதப்படுகிறது.
இந்நிலையில் இந்த படத்தின் தொலைக்காட்சி உரிமையை கை பற்றுவதில் பல்வேறு போட்டிகள் நிலவிய நிலையில், தற்போது தொலைக்காட்சிக்காக உரிமையை விஜய் டிவி பெற்றுள்ளது. ஓடிடி தளத்தில் வெளியான ஒரு சில மாதங்களில் விஜய் டிவி தொலைக்காட்சியில் 'சார்பட்டா' பரம்பரை திரைப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.