ஜெயமோகன் ஒரு இழிவான நபர் என்பதை நான் பல தருணங்களில் பதிவு செய்திருக்கிறேன்.. சர்கார் திருட்டு கதைக்கு அவர் முட்டுக்கொடுக்க மின்னல் வேகம் காட்டிய சம்பவம் அவருடைய இழிவான குணத்திற்கு மேலும் ஒரு எடுத்துக்காட்டாக ஆகியிருக்கிறது. 

உலகத்திலேயே பாவமான ஜென்மம் என்றால் அவன் உதவி இயக்குனன் மட்டுமே.. விண்ணுக்கும் மண்ணுக்குமாக விஷயங்களைப் பேசுகிற அறிவு இருக்கும். ஆனால் அடுத்தவேளை உணவிற்கு பணமிருக்காது. மாடு மாதிரி வேலை பார்ப்பபான். மறுநாள் டீக்குடிக்க காசில்லலாமல் இருப்பான். அவனுடைய நேரத்தை யார் யாரோ களவாடுவார்கள். ஆனால் அந்த மாத வாடகை கொடுக்க பணமில்லாமல் அவமானத்தில் இருப்பான்.

 

உதவி இயக்குனனாக இருக்கும் காலம் முழுவதும் அவனுடைய அறிவை உழைப்பை நேரத்தை இளமையை வாழ்க்கையை என எல்லா வற்றையும் சுரண்டலுக்கு ஒப்புக் கொடுத்து விட்டு நிர்கதியாக நிற்பான். அவனோடு சேர்ந்து அவனுடைய குடும்பமும் தெருவில் நிற்கும். சகல அவமானத்தையும் சந்திக்கும். அவனுடைய பெற்றோர் சகோதர சகோதரிகள் என அனைத்து உறவினர்களும் அவனுடைய எந்த உதவியும் இல்லாமல் வற்றிப் போயிருப்பார்கள்.. தீபாவளி பொங்கல் போன்ற விசேஷ நாட்களுக்கு கூட ஊருக்குப் போக முகமில்லாமல் அறையில் பட்டினியில் படுத்திருப்பான்.

யாருக்கும் எதுவும் செய்ய முடியவில்லையே என்கிற குற்ற உணர்வு அவனை சதா அரித்துக் கொண்டே இருக்கும்..பல நேரங்களில் பையில் பத்து பைசா இல்லாமல் பார்க்கில் உட்கார்ந்துதான் அவன் ஒரு கதையை உருவாக்கிக் கொண்டிருப்பான். அத்தகைய வறிய ஒரு மனிதனிடம் இருந்துதான் ஒரு கதை திருடப்பட்டிருக்கிறது. 

ஒரு எழுத்தாளனாக இதைப்பற்றி எந்த முடிவையும் சொல்லாமல் கொஞ்சம் பொறுத்திருப்போம் என்கிற குறைந்த பட்ச மனிதாபிமானம் கூட இல்லாமல், அறம் இல்லாமல், மறுநாள் களத்தில் குதித்து ஒரு திருடனுக்கு வக்காலத்து வாங்க நினைத்தார் பாருங்கள் ஜெயமோகன்..அந்த குரூரம்தான் ஜெயமோகன். உலகின் வறிய மனிதனின் வயிற்றில் கூட்டு சேர்ந்து மண்ணை அள்ளிப் போட தயாரானார் பாருங்கள் அந்த வக்கிரம்தான் ஜெயமோகன்.

இந்த வக்கிரம் ஒருவகையில் சினிமா உலகம் எதிர்பார்க்கிற வக்கிரம்தான். அந்த வக்கிர செயலுக்கு தயார் என்று பலவிதங்களிலும் அறிவிக்கிற மனிதனுக்கு அது ரகசியமாக சிவப்புக் கம்பளம் விரிக்கும். அது தெரிந்தேதான் ஜெயமோகன் இந்த பணியில் ஈடுபட்டார். இந்த வக்கிரத்தோடு ஜெயமோகன் திரைத்துறையில் இன்னும் உயர்ந்த நிலைக்கு செல்வார் என்பதுதான் திண்ணம். -முகநூலில் ஆர்.பிரபாகர்.