ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், தளபதி விஜய் நடித்து வரும் 'சர்கார்' திரைப்படத்தை வரும் தீபாவளி தினத்திற்கு வெளியிட வேண்டும் என படக்குழுவினர் இரவு பகல் பாராமல் உழைத்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் இந்த படத்தின் அடுத்த கட்ட பணியான டப்பிங் பேசும் பணியை இன்று முதல் விஜய் துவங்க உள்ளதாக நெருங்கிய வட்டாரங்கள் கூறியுள்ளது.

மேலும், இந்த மாதம் இறுதியிலே அல்லது அடுத்த மாதத்தின் ஆரம்பத்திலோ, படக்குழுவினர் அனைவரும் அமெரிக்கா செல்ல உள்ளதாகவும் அங்கு விஜய், கீர்த்தியின்  டூயட் பாடல் மற்றும் ஒரு முக்கிய சண்டை காட்சி படமாக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. 

சர்கார் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியான போதே இந்த திரைப்படம் பல்வேறு சர்ச்சைகளை சந்தித்தாலும், ரசிகர்கள் மத்தியில் இந்த படத்திற்காக எதிர்ப்பார்ப்பு அதிகமாகவே உள்ளது. 

இந்த படத்தில், நடிகை வரலட்சுமி, ராதாரவி, பழ. கருப்பையா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை அதிக பட்ஜெட்டில் தயாரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.