சர்கார் படத்திற்கு அடுத்தடுத்து ஏற்படும் சோதனை மேல் சோதனைகள் எதுவும் குறைந்தபாடில்லை. தீபாவளியன்று ‘சர்கார்’ படம் வெளியாகும் அனைத்து தியேட்டர்களிலும் ’தியேட்டர் கட்டணத்தைக் கண்காணிக்கும் குழு கண்டிப்பாக ஆய்வை மேற்கொள்ளவேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அறிவுறுத்தியுள்ளது. 

ஏற்கனவே ரஜினி,கமல் கொடுக்கும் அரசியல் தொல்லைகள் போதாதென்று விஜய்யும் மெல்ல தனது முதலமைச்சர் கனவை அவ்வப்போது மேடைகளில் வெளிப்படுத்தி வருகிறார். இதற்கு மறைமுக பதிலடி கொடுக்கும் வகையில்தான் இந்தத் தியேட்டர் கண்காணிப்புக் குழு திடீரென விழித்துக்கொண்டுள்ளதாகத் தெரிகிறது. 

‘சர்கார்’ படம் வெளியாக உள்ள மதுரை வட்டாரத் தியேட்டர்கள் கண்காணிப்புக் குழு, அவ்வாறு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவது தெரிந்தால் தியேட்டர் உரிமத்தையே ரத்து செய்யலாம் என்றும் அறிவித்திருப்பது விஜய் மற்றும் சன் பிக்சர்ஸ் வட்டாரத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஏனெனில் விஜய் போன்ற பெரிய ஸ்டார்களின் படத்தில் விநியோகஸ்தர்களும், தியேட்டர் உரிமையாளர்களும் கணிசமாக காசு சம்பாதிப்பதே இந்த அதிக கட்டண வசூலிப்பில்தான்.

 

அந்த வசூலுக்கு உயர்நீதி மன்றத்தின் மதுரைக்கிளை அடிமடியில் கைவைத்திருப்பது  என்பது விஜய்க்கு எதிராக பெரிய ஆப்பு சொருகும் வேலைதான்.  ஒருவேளை இதே உத்தரவு சென்னை உட்பட அனைத்து முக்கிய நகரங்களிலும் செயல்படுத்தப்படுமானால் சர்காருக்கு சங்குச் சத்தம் உறுதிதான்.