Asianet News TamilAsianet News Tamil

இரவோடு இரவாக கைமாறிய ரூ.50 லட்சம்! சர்கார் கதையில் சமரசம் ஏற்பட்டதன் பின்னணி!

சர்கார் விவகாரத்தில் ஒரு அங்கீகாரத்தை தருவதாகவும் எஸ்.ஏ.சி வாக்குறுதி அளித்ததாக கூறப்படுகிறது. அப்படி என்றால் 50 லட்சம் ரூபாய் வேண்டும் என்று மற்றொரு டீலை முன்வைக்க உடனடியாக ரூ.50 லட்சம் கொடுத்து இரவோடு இரவாக செட்டில்மென்ட் முடிக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. 

Sarkar Issue... Murugadoss will thank Varun Rajendran
Author
Chennai, First Published Oct 31, 2018, 9:59 AM IST

இரவோடு இரவாக 50 லட்சம் ரூபாய் கைமாறிய பிறகே சர்கார் படத்தின் கதை விவகாரத்தில் சமரசம் ஏற்பட்டுள்ளது. விஜய் நடிப்பில் சன் பிக்சர்ஸ் பெரும் பொருட் செலவில் எடுத்துள்ள திரைப்படம் சர்கார். படத்தின் அனைத்து வேலைகளும் முடிந்து தீபாவளியன்று வெளியாக தயாராக உள்ளது. விஜய் – முருகதாஸ் வெற்றிக் கூட்டணி என்பதால் தமிழகம் மட்டும் அல்லாமல் உலகம் முழுவதும் தமிழர்கள் வாழும் அனைத்து பகுதிகளிலும் சர்காருக்கு பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. Sarkar Issue... Murugadoss will thank Varun Rajendranஇதனை பயன்படுத்தி ஒவ்வொரு ஏரியாவையும் கோடிக்கணக்கான ரூபாய்க்கு சன் பிக்சர்ஸ் விற்றுத் தீர்த்துள்ளது. இந்த நிலையில் தான் துணை இயக்குனர் வருண் ராஜேந்திரன் என்பவர் தனது செங்கோல் படத்தின் கதையைதிருடி முருகதாஸ் சர்கார் என்ற பெயரில் திரைப்படத்தை எடுத்துவிட்டதாக உயர்நீதிமன்றத்திற்கு சென்றார் தனது செங்கோல் படத்தின் கதையும் – சர்கார் கதையும் ஒன்று தான் என்று தென்னிந்திய எழுத்தாளர் சங்கம் அங்கீகரித்துள்ளதாகவும் லெட்டர் பேட் ஒன்றையும் வருண் ராஜேந்திரன் தாக்கல் செய்தார். Sarkar Issue... Murugadoss will thank Varun Rajendran

படத்தில் கதை என்ற இடத்தில் தனது பெயரை குறிப்பிட்டு தனக்கு 30 லட்சம் ரூபாய் இழப்பீடு கொடுத்தால் தான் சர்காரை வெளியிட அனுமதிக்க வேண்டும் என்று வருண் ராஜேந்திரன் வழக்கு தொடர்ந்தார் கடந்த வாரம் வழக்கு விசாரணைக்கு வந்த போது தங்கள் தரப்பு விளக்கத்தை 30ந் தேதி தெரிவிப்பதாக இயக்குனர் முருகதாசும், தயாரிப்பாளரான சன் பிக்சர்சும் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் 30ந் தேதியான நேற்று வழக்கு விசாரணைக்கு வந்த போது திடீரென வருண் ராஜேந்திரனுடன் தாங்கள் சமாதானமாக செல்ல உள்ளதாகவும், அவருக்கு உரிய அங்கீகாரத்தை படத்தின் டைட்டில் கார்டில் கொடுக்க உள்ளதாகவும் முருகதாஸ் தரப்பு மனு தாக்கல் செய்தது. 

இதற்கு வருண் ராஜேந்திரன் தரப்பும் சம்மதம் தெரிவித்து மனு அளித்தது. இதனை அடுத்து வழக்கை முடித்து வைப்பதாக உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. நேற்று முன் தினம் வரை சர்கார் கதை தன்னுடையது என்று கூறியதோடு மட்டும் அல்லாமல் செங்கோல் கதைக்கு சப்போர்ட் செய்து பேசி வந்த பாக்யராஜையும் முருகதாஸ் மிக கடுமையாக விமர்சித்து வந்தார். ஆனால் ஒரே நாள் இரவில் முருகதாஸ் பம்மியதன் பின்னணியில் சன் பிக்சர்ஸ் இருப்பது தெரியவந்துள்ளது. விவகாரம் மிக தீவிரம் ஆன உடன் பாக்யராஜை அழைத்து சன் பிக்சர்சின் செம்பியன் பேசியுள்ளார்.

 Sarkar Issue... Murugadoss will thank Varun Rajendran

அப்போது வருண் ராஜேந்திரன் கதையும் – முருகதாஸ் கதையும் மிகவும் ஒத்துப்போவதாக கூறியதுடன், கதை எப்படி திருடப்பட்டது என்பதையும் ஆதாரத்துடன் பாக்யராஜ் புட்டு புட்டு வைத்துள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த சன் பிக்சர்ஸ் இந்த விவகாரம் எல்லாம் நீதிமன்றம் சென்றால் நிச்சயமாக சர்கார் தீபாவளிக்கு வெளியாகாது என்கிற உண்மையை தெரிந்து கொண்டது.  உடனடியாக முருகதாசை அழைத்து வருண் ராஜேந்திரனுடன் செட்டில்மென்ட் பேசுமாறும், இனியும் கதை தன்னுடையது என்று பேசி நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்றும் சன் பிக்சர்ஸ் தெரிவித்ததாக சொல்லப்படுகிறது. Sarkar Issue... Murugadoss will thank Varun Rajendran

அதுமட்டும் இன்றி படத்தின் டைட்டிலில் வருண் ராஜேந்திரன் பெயரை குறிப்பிட வேண்டும் என்று உயர்நீதிமன்றம் தெரிவித்துவிட்டால் மீண்டும் சென்சாருக்கு அனுப்ப வேண்டியது வரும், படம் தீபாவளிக்கு வெளியாகாது என்கிற பிரச்சனையையும் சன் பிக்சர்ஸ் முருகதாசிடம் எடுத்துரைத்துள்ளது. இதனை தொடர்ந்தே தனது நிலையில் இருந்து இறங்கி வந்த முருகதாஸ்  தரப்பு பாக்யராஜ் முன்னிலையில் வருண் ராஜேந்திரனுடன் சமரசம் பேசியுள்ளது. 30 லட்சம் ரூபாய் இழப்பீடு, படத்தில் கதை என்று தனது பெயர் என்பதில் வருண் ராஜேந்திரன் உறுதியாக இருந்துள்ளார். ஆனால் ஒரு கட்டத்தில் விஜயின் தந்தை எஸ்.ஏ.சியே வருண் ராஜேந்திரனுடம் பேசி நடந்ததற்கு வருத்தம் தெரிவித்ததாக சொல்லப்படுகிறது.

 Sarkar Issue... Murugadoss will thank Varun Rajendran

அதுமட்டும் இன்றி தற்போதைக்கு பணத்தை பெற்றுக் கொள்ளுமாறும் நிச்சயமாக சர்கார் விவகாரத்தில் ஒரு அங்கீகாரத்தை தருவதாகவும் எஸ்.ஏ.சி வாக்குறுதி அளித்ததாக கூறப்படுகிறது. அப்படி என்றால் 50 லட்சம் ரூபாய் வேண்டும் என்று மற்றொரு டீலை முன்வைக்க உடனடியாக ரூ.50 லட்சம் கொடுத்து இரவோடு இரவாக செட்டில்மென்ட் முடிக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios