நதிகளை மீட்போம் பேரணியில் பங்கேற்றதற்காக, நடிகை காஜல் அகர்வாலுக்கு நன்றி தெரிவித்து ஈஷா யோகா மையத்தின் நிறுவனர் சற்குரு ஜக்கி வாசுதேவ் பரிசு அனுப்பியுள்ளார். 

நாடு முழுவதும் நதிகளை இணைக்க வேண்டும் என வலியுறுத்தி 16 மாநிலங்களில் மாபெரும் பேரணியை நடத்தினார் ஜக்கி வாசுதேவ். நதியை இணைக்கும் திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பல்வேறு அரசியல் பிரபலங்கள், சமூக ஆர்வலர்கள், திரைப்பட நடிகர் நடிகைகள் என பல்வேறு தரப்பினரும் முன் வந்தனர்.

குறிப்பாக, கோலிவுட் சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த், காமெடி நடிகர் விவேக், நடிகை தமன்னா, நடிகர் ஆரி என பலர் ஆதரவு தெரிவித்தனர். இந்நிலையில், தன்னுடைய ஆதரவை தொடர்ந்து தெரிவித்து வந்த நடிகை காஜல் அகர்வாலுக்கு நன்றி தெரிவித்து பரிசு அனுப்பியுள்ளார் ஜக்கி.

இதனால் பெருமை அடைந்த நடிகை காஜல் அகர்வால், இவர் அனுப்பியுள்ள வாழ்த்து மடலை புகைப்படம் எடுத்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 

அந்த பரிசில், "160 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் பங்கு பெற்ற நதிகளை மீட்போம் பேரணி என்ற தேசிய இயக்கத்தை உருவாவதற்கு, உங்கள் உறுதிபாடும் ஆதரவையும் தந்ததற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் என்றும், நம் தேசத்து நதிகள் புத்துயிர் பெறுவதற்கான நமது முயற்சி மிக முக்கியமானது என்றும் தெரிவித்துள்ளார்".