பிக்பாஸ் வீட்டில் இருந்து கடந்த வாரம், நடிகை ரேஷ்மா வெளியேற்றப்பட்டது, ரசிகர்களுக்கு மட்டும் இன்றி போட்டியாளர்களுக்கும் மிக பெரிய அதிர்ச்சியாக இருந்தது. இந்நிலையில் நேற்றைய தினம் திடீர் என நடிகர் சரவணன் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.

இந்த விஷயத்தை அனைத்து போட்டியாளர்களையும் லிவிங் ஏரியாவிற்கு அழைத்து, "ஒரு சில காரணங்களுக்காக சரவணன் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார் என்கிற தகவலை தெரிவிக்கிறார்" பிக்பாஸ். 

இது பற்றி தெரிந்ததும், அனைத்து போட்டியாளர்களும் அதிர்ச்சியடைகின்றனர். குறிப்பாக, மதுமிதா, கவின், சாண்டி ஆகியோர் தேம்பி தேம்பி அழுகின்றனர். மேலும் என்ன காரணம் பிக்பாஸ் என அணைத்து போட்டியாளர்களும் கேள்வி எழுப்புகிறார்கள். இந்த காட்சி தற்போது வெளியாகியுள்ள முதல் ப்ரோமோ மூலம் தெரிகிறது.

நடிகர் சரவணன் திடீர் என வெளியேற்றப்பட காரணம், கடந்த வாரத்திற்கு முந்திய வாரம், சேரன் தன்னை வலிக்கும்படி வேண்டுமென்றே தூக்கி வீசினார் என்கிற பஞ்சாயத்து கமல் முன்வந்தபோது, தொகுப்பாளர் கமலஹாசன் உதாரணத்திற்காக அந்த காலங்களில் பேருந்துகளில் செல்லும் போது, மிகவும் கூட்டமாக இருக்கும் போது ஒருவரை ஒருவர் கூட்ட நெரிசலில் தொட வேண்டி இருக்கும் எனக் கூறினார்.

மேலும் பெண்களை உரசுவதற்காக கூட சிலர் பேருந்துகளில் வருவதுண்டு எனக் கூறியபோது, நடிகர் சரவணன் கையை உயர்த்தி கல்லூரி காலங்களில் தானும் பெண்களை உரசுவதற்காக பேருந்துகளில் செல்வது உண்டு என கூறினார்.  இவரின் இந்த பேச்சுக்கு எதிர்ப்புகள் கிளம்பின. இதற்காக அவர் மன்னிப்பு கேட்ட போதிலும் தொடர்ந்து எதிர்ப்புகள் வந்தமையால் திடீரென நேற்றைய தினம் பிக் பாஸ் வீட்டை விட்டு நடிகர் சரவணன் வெளியேற்றப்பட்டார் என கூறப்படுகிறது.

ஆனால், இது தான் உண்மையான காரணமா? அல்லது வேறு ஏதுனும் காரணமா என்பது இன்றிய தினம் தெரிய வர வாய்ப்பு உள்ளது.