விஜய் டிவி தொலைக்காட்சியில் பல சீரியல்கள் ஒளிபரப்பாகி இருந்தாலும், எப்போதுமே 'சரவணன் மீனாட்சி' சீரியல் ஸ்பெஷல் தான். இந்த சீரியலின் முதல் பாகத்தில் நடித்த செந்தில் - ஸ்ரீஜா இருவரும் உண்மையிலேயே காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

இரண்டாம் பாகமாக எடுக்கப்பட்ட 'சரவணன் மீனாட்சி சீரியலில்' சரவணன் கதாபாத்திரத்தில் மூன்று நடிகர்கள் மாறி நடித்தனர். அவர்களில் ஒருவர் பிரேம்.

இவர் ஏற்கனவே, கனாக்காணும் காலங்கள், மற்றும் பல குறும்படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் இவருக்கு கடந்த இரு தினங்களுக்கு முன், சுஷ்மா என்கிற பெண்ணுடன் திருமணம் நடந்து முடிந்துள்ளது.

இதில் சரவணன் மீனாட்சியில் வேட்டையனாக கலக்கிய பிக்பாஸ் கவின் கலந்து கொண்டு, மணமக்களை வாழ்த்தியதோடு, அவர்களுடன் எடுத்து கொண்ட செல்பியை வெளியிட்டுள்ளார். 

தற்போது இந்த தம்பதிகளுக்கு ரசிகர்களும் தங்களுடைய வாழ்த்தை தெரிவித்து வருகிறார்கள். இந்த புகைப்படத்தில், கவின் மீசையை ட்ரிம் செய்துகொண்டு  பார்பதற்க்கே சற்று வித்தியாசமாக உள்ளார்.

அந்த புகைப்படம் இதோ...

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Nalla iru macha.. 🤗 #PremWedsSushma

A post shared by Kavin M (@kavin.0431) on Jan 29, 2020 at 10:57am PST