Asianet News TamilAsianet News Tamil

தல பட இயக்குனர் இயக்கும் படத்தில் நடிக்கிறாரா சரவணா ஸ்டார் அண்ணாச்சி? பட்ஜெட் மட்டும் இத்தனை கோடியா?

பிரபலமாக மக்களால் பார்க்கப்படும் அனைவருமே வெள்ளித்திரையில் தோன்றும் வாய்ப்பு கிடைத்தால் அதனை பயன்படுத்தி கொள்கிறார்கள். அந்த வகையில், விளம்பர படங்கள் மூலம் தோன்றி அசத்தி வந்த, சரவணா ஸ்டார் அண்ணாச்சி இப்போது வெள்ளித்திரைக்கு வர உள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
 

saravana store annachi turn to cinema
Author
Chennai, First Published Jun 16, 2019, 4:08 PM IST

பிரபலமாக மக்களால் பார்க்கப்படும் அனைவருமே வெள்ளித்திரையில் தோன்றும் வாய்ப்பு கிடைத்தால் அதனை பயன்படுத்தி கொள்கிறார்கள். அந்த வகையில், விளம்பர படங்கள் மூலம் தோன்றி அசத்தி வந்த, சரவணா ஸ்டார் அண்ணாச்சி இப்போது வெள்ளித்திரைக்கு வர உள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

saravana store annachi turn to cinemaஇவர் விளம்பரப்படங்களில், ஹன்சிகா, தமன்னாவுடன் தோன்றியது பல்வேறு விமர்சனங்களுக்கு ஆளானது. எனினும் தொடர்ந்து தன்னுடைய கடையில் விளம்பர படங்களில் தோன்றி அனைவரையுமே ரசிக்க வைத்தார்.

மேலும், இவரை திரைப்படங்களில் நடிக்க வைக்க சிலர் முயற்சித்து வருவகாகவும், இவர் நடித்தால் நயன்தாராவுடன் தான் நடிப்பேன் என கூறியதாக கூட தகவல்கள் பரவியது என்பது நாம் அறிந்தது தான்.

saravana store annachi turn to cinema

இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க, தற்போது ரூ.30 கோடி பட்ஜெட்டில் ஒரு படத்தை இவரே தயாரித்து நடிக்கவுள்ளதாக கிசுகிசுக்கப்படுகிறது. இந்த படத்தை அஜித்தை வைத்து உல்லாசம் படத்தை இயக்கிய ஜுடி-ஜெர்ரி இயக்கவுள்ளதாக உள்ளதாகவும், இவருக்கு ஜோடியாக வட இந்தியாவின் முன்னணி நடிகை ஒருவர் நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. 

saravana store annachi turn to cinema

மேலும் இப்படம் அனைத்து அம்சங்களும் கொண்ட கருத்துள்ள படமாக உருவாக உள்ளதாகவும் கூறப்படுகிறது. அனால் இந்த தகவல் எந்த  அளவிற்கு உண்மை என்பது படம் குறித்த அதிகார பூர்வ அறிவிப்புகள் வெளியானால் மட்டுமே தெரியவரும்.

Follow Us:
Download App:
  • android
  • ios