சரவணா ஸ்டார் உரிமையாளர் அருள், விளம்பர படங்களில் இவருக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து, திரைப்பட நடிகராகவும் மாறியுள்ளார். இவர் நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தான் பூஜையுடன் தொடங்கியது. இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை கீர்த்தி திவாரி நடித்து வருகிறார்.

தல அஜித் மற்றும் நடிகர் விக்ரமை வைத்து, 'உல்லாசம்' படத்தை இயக்கிய இரட்டை இயக்குனர்கள் ஜேடி - ஜெர்ரி இந்த படத்தை பிரமாண்ட பட்ஜெட்டில் இயக்கி வருகிறார்கள். 

ஏற்கனவே இந்த திரைப்படம் 100 கோடி பட்ஜெட்டில் உருவாக உள்ளது என கூறப்பட்ட நிலையில், தற்போது ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் 10  கோடி செலவு செய்து அனைவரையும் மிரட்டியுள்ளாராம் அண்ணாச்சி.

ஜொலிஜொலிக்கும் பிரமாண்ட செட், பளபளக்கும் மின் விளக்குகள், 100 க்கும் மேற்பட்ட நடன கலைஞர்களுக்கு நடுவே, இந்த பாடலில் நடிகை கீர்த்தி திவாரியுடன் ரொமான்ஸ் செய்துள்ளார் சரவணா ஸ்டார் அண்ணாச்சி.

பணத்தை தண்ணீரை வாரி இறைத்து, விறுவிறுப்பாக உருவாகி வரும் இந்த படத்திற்கு, இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

பல கோடி செலவு செய்து மாஸ் நடிகர்களின் படங்களுக்கு நிகராக விறு விறு என வளர்ந்து வரும் இப்படம், வசூலிலும் சாதனை படைக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்...