நடிகரும், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனருமான சரத்குமார், டிஜிபி திரிபாதி காவல்துறையின் அனைத்து தகவல்கள் தொடர்புகளும் தமிழில் இருக்க வேண்டும் என பிறப்பித்த உத்தரவுக்கு பாராட்டு தெரிவித்து, கட்சியின் சார்பாக அறிக்கை ஒன்றை தெரிவித்துள்ளார்.

இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, காவல்துறையில் அனைத்து தகவல் தொடர்புகளும், தமிழில் இருக்க வேண்டும் என்று டிஜிபி திரிபாதி பிறப்பித்த உத்தரவுக்கு பாராட்டுக்கள்.

காவல்துறையின் வருகை பதிவேடுகள், கடிதப் போக்குவரத்து குறிப்புகள், அலுவலக முத்திரைகள், பெயர் பலகைகள், காவல்துறை வாகனங்களில் 'காவல்' என தமிழில் எழுதுதல், உள்ளிட்ட காவல் துறை சம்பந்தப்பட்ட அனைத்து தகவல் தொடர்புகளும் தமிழில் பராமரிக்கப்பட வேண்டும் என டிஜிபி அவர்கள் உத்தரவிட்டு இருப்பது வரவேற்கத்தக்கது.

தமிழகத்தின் மக்கள் தொடர்பிலும் பாதுகாப்பிலும் பெரும் பங்கு வகிக்கும் காவல்துறையில், தமிழ் பயன்பாடு அதிகரிக்க பட்டுள்ளதால் பாமர மக்களும் எளிமையாகப் புரிந்து கொண்டு தமிழக காவல்துறையை அணுகும் சூழல் உருவாகியுள்ளது. காவல்துறை பொதுமக்களுக்கு நண்பன் என்பதை உணர்ந்த இந்த நடவடிக்கையும் உதவும்  தமிழகத்தில், தமிழ் மொழி புறக்கணிப்பு படுவதாகவும், பிறமொழிகள் திணிக்கப்படுவதாகவும் எதிர்க்கட்சிகள் முன்வைத்த குற்றச்சாட்டுகள் உண்மைக்கு புறம்பானவை. என்பதை இந்த உத்தரவு நிரூபணம் செய்துள்ளது, என சரத்குமார் தன்னுடைய அறிக்கையில் கூறியுள்ளார்.