நடிகை பாவனாவுக்கு இழைக்கப்பட்ட பாலியல் வன்கொடுமை பற்றிய செய்து இன்னும் தணிந்தபாடு இல்லை, பாவனாவை தொடர்ந்து தானும் ஒரு பிரபல தொலைக்காட்சியின் தயாரிப்பு பிரிவு அதிகாரியால் பாதிக்க பட்டேன் என கூறி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாகினர் நடிகர் சரத்குமாரின் மகளும், நடிகையுமான வரலட்சுமி.
தற்போது இது குறித்து நடிகர் சரத்குமார், ஒரு தந்தையாகவும் பெண்களை மதிக்கத்தக்கவராகவும் ஒரு ட்விட் செய்துள்ளார்.
அதில், பெண்ணை அவமதிக்கும்போது எல்லாம் ஒருவர் ஆணாக இருக்க தகுதியில்லாதவராக ஆவதாக சரத்குமார் தெரிவித்திருக்கிறார். இவருடைய இந்த கருத்திற்கு பலரும் தங்களுடைய ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.
